Tamil Movie Ads News and Videos Portal

பிகில் விமர்சனம்

கத்தியைக் கீழப்போட்டுட்டு புட்பாலையும் புத்தகத்தையும் எடுங்கப்பா, கூடவே பெண்களை அடக்கி வைக்காம அவங்க திறமையை ஊக்குவித்து முடுக்கி விடுங்க”ன்னு அட்லீ விஜய்யை வச்சி மெசேஜ் சொல்லிருக்காப்டி. எப்போதுமே அட்லீ சொல்ற மேட்டர் அரதப்பழசா இருந்தாலும் சொல்ற விதம் நறுக்குன்னு இருக்கும். பிகில் முன்பாதில அதுவும் சறுக்கிட்டு. பின்பாதி படத்தை குறை சொல்பவர்களுக்கு முன்பாதியால் வந்த கோபம் இருக்கலாம். அது தனி டிப்பார்ட்மெண்ட்

விஜய்யை அவர் ரசிகர்களுக்கு எப்படிப் பார்த்தால், எப்படி அடித்தால் எப்படி ஆடினால், எப்படி பன்ச் பேசினால் பிடிக்குமோ அப்படி எல்லாம் செய்ய வைத்திருக்கிறார் அட்லீ. எல்லா ஆடியன்ஸ் பல்ஸையும் பிடித்து படமெடுக்கும் அட்லீ இந்தமுறை விஜய் ரசிகர்களை மட்டுமே டார்கெட் வைத்துள்ளார். ரசிகர்களும் அட்லீயை ஏமாற்றவில்லை. விஜய் காமெடி செய்ய முயற்சிக்கும் போதே சிரிக்கிறார்கள். அடிக்க எழும் போதே அலறுகிறார்கள். எல்லோருக்குமான விஜய் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் தான் பிரமாதமாக வருகிறார். குறிப்பாக ஆசிட் வீச்சால் முகம் பாழாகி வீட்டில் முடங்கி கிடக்கும் ப்ளேயர் அனிதாவை விஜய் உற்சாகப்படுத்தி அழைத்து வரும் காட்சியில் மனதுக்கு ரொம்ப நெருக்கமாகி விடுகிறார். செண்டிமெண்ட் காட்சிகள் சிலவற்றில் விஜய்யின் நடிப்பு மெர்சல்.

சிங்கப்பெண்களாக வரும் இந்துஜா உள்ளிட்ட அத்தனை கேர்ள்ஸும் கவனிக்க வைக்கிறார்கள்

காணாமல் போகிறவர்கள் லிஸ்டில் ஆனந்த்ராஜ், விவேக், கதிர் உள்ளிட்டவர்கள் இடம்பிடிப்பது பெரும் துரதிர்ஷ்டம். யோகிபாபு மட்டும் லைட்டா கலகலக்க வைக்கிறார். நயன்தாரா விஜய் லவ் சீக்வென்ஸ்லாம் பச்சப்புள்ளத்தனம். நயன்தாராவை ஒருசீன்ல நடிக்க வச்சி அவர் ரசிகர்களையும் ஆறுதல் படுத்தி இருக்காங்க.

சண்டைக்காட்சிகள் மற்றும், கேமரா கோணங்கள் இரண்டும் பிகிலின் ஸ்ட்ராங் ஏரியா. பின்னணி இசையில் பெரிய அதிர்வு ஏன் இல்லைனு தெரியல. சிங்கப்பெண்ணே விஷுவல்ஸ் தரம்.

ராயப்பன் கேரக்டருக்கான பின்புலம் சரியா எழுதலைன்னதும் விஜய் அந்தக் கேரக்டரை நல்லா பண்ணி இருந்தாலும் எ எ எ எ எடுபடல.

முன்பாதி படம்லாம் உச்சக்கட்ட சோதனை. படம் ஒரு ப்ளோவில் போகாமல் வெறும் காட்சிகளாக நகர்ந்து நம்மை ஓட வைக்கிற முயற்சி நிறைய நடக்குது. கதை பழசு, களம் பழசு விஜய் மட்டும் தான் ரவுசு. இருந்தாலும் எவ்ளோ…. நேரம்?

இப்படி நரித்தன குறைகள் நிறைய இருந்தாலும் பின்பாதியில் வரும் அந்த அற்புதமான கோச் சீக்வென்ஸ் நிஜமான வெறித்தனம். குடும்பத்தோடு போய் பார்க்குற அளவுக்கு ஒர்த்தான்னு கேட்டா கண்டிப்பா ஒர்த்து தான். என்ன படம் ஆரம்பிச்சு ஒரு முக்கால் மணி நேரம் கழித்து கூட போகலாம்..கதை எங்கேயும் போயிருக்காது. அந்த இடங்கள் மட்டும் சரியா அமைஞ்சிருந்தால் பிகில் சத்தம் இன்னும் பெருசா கேட்டிருக்கும்.

Get real time updates directly on you device, subscribe now.

you're currently offline