96

Follow
6.5

Fair

7.6

User Avg

96 ரிலீஸ் பண்ணுங்க விஷால் உங்களுக்கு பணம் நான் தர்றேன். – விஜய்சேதுபதி அதிரடி

96 ரிலீஸ் பண்ணுங்க விஷால் உங்களுக்கு பணம் நான் தர்றேன். – விஜய்சேதுபதி அதிரடி

இன்று காலையில் வெளியாகி காண்பவர்களை எல்லாம் பரவசத்திற்கு உள்ளாக்கி வருகிறது விஜய்சேதுபதி திரிஷா நடித்த 96 படம். இப்படத்தை இன்று வெளியிடுவதற்கு கடைசி நேரத்தில் கட்டையைப் போட்டுவிட்டார் நடிகர் விஷால். 96 படத்தயாரிப்பாளர் கத்திச்சண்டை படத்தின் பாக்கித்தொகையை எனக்குத் தந்துவிட்டு படத்தை வெளியிடட்டும் என்று கறார் காட்டியதும் கவலை கொண்டார் விஜய்சேதுபதி.

படம் வெளியாகி வசூல் வந்தால் தானே தயாரிப்பாளரால் பணத்தை எண்ணி வைக்க முடியும்? அதற்குள் இந்த விஷால் இப்படி செய்கிறாரே என்று யோசித்த விஜய்சேதுபதி, விஷாலுக்கு 96 படத்தயாரிப்பாளர் தரவேண்டிய மூன்றரை கோடி ரூபாய் பணத்தை நானே தருகிறேன். அவரைப் பிரச்சனை பண்ணச் சொல்லாதீர்கள் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். அதனால் விஷால் 96 படத்திற்கான தடையை விலக்க படம் இப்போது திரையரங்குகளை கலக்கிக் கொண்டு இருக்கிறது. “தயாரிப்பாளருக்கு ஒரு கஷ்டம்னு வந்ததும் தான் பணத்தை அள்ளிக்கொடுக்கிறான் பாரு..அவன் தாம்யா உண்மையான கலைஞன்” என்று விஜய்சேதுபதியை உச்சியில் வைத்து கொண்டாடுகிறது கோடம்பாக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up