A. R. Rahman

Follow

ஏ.ஆர் ரகுமானுக்கு தயாரிப்பாளர்கள் சார்பாக வேண்டுகோள்

ஏ.ஆர் ரகுமானுக்கு தயாரிப்பாளர்கள் சார்பாக வேண்டுகோள்

ஒரு படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருப்பவை பாடல்கள். இப்போது ஒருசில படங்கள் பாடல்கள் இல்லாமல் வந்தாலும் பெரும்பாலான படங்களுக்கு பாடல்கள் தான் ஆக்‌சிஷன். ஒரு படத்தில் நல்ல பாடல்கள் அமைந்து விட்டால் படம் சுமாராக இருந்தாலும் அப்பாடல்களுக்காகவே அப்படம் மக்கள் மனதில் தங்கிவிடும். அப்படியான பாடல்களைக் கொடுத்த இசை அமைப்பாளர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். இப்பாடல்களை உருவாக்குவது இசை அமைப்பாளராக இருந்தாலும் அப்பாடலை உருப்பெற வைப்பது தயாரிப்பாளர் தான். ராகத்திற்கு தகுந்த குரல், வரிகள், பாட்டுக்குத் தகுந்த லொக்கேசன் என ஒருபாடல் வளரும் எல்லாச் சூழலுக்கும் பணம் தான் அடிப்படை.

அப்படி பணத்தை இறைக்கும் தயாரிப்பாளர்களுக்கு அப்பாடல்கள் ஒளிப்பரப்பாகும் இடங்களில் சரியான அங்கீகாரம் இல்லாத நிலை இருந்து வருகிறது. உதாரணத்திற்கு டிவியில் பாடல்கள் ஒளிப்பரப்பாகும் போது படத்தின் பெயர், இசை அமைப்பாளர் பெயர், பாடியர் பெயர் ஆகியவை தான் இடம்பெறுகிறது. பணம் போட்டு அப்பாடல் வெளிவர காரணமாக இருந்த தயாரிப்பாளர் பெயரை யாரும் மென்சன் பண்ணுவதில்லை. எப்.எம்-லும் அதே நிலைமை தான். முதல்முறையாக சென்ற வாரத்தில் இருந்து தயாரிப்பாளர்கள் சார்பாக JSK சதீஷ்குமார் வைத்துள்ள கோரிக்கையை ஏற்று எப்.எம்-ல் பாடல் ஒளிப்பரபாகும் போது தயாரிப்பாளரின் பெயரை உச்சரிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து JSK சதீஷ்குமார் இதே கோரிக்கையை இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானிடமும் வைத்துள்ளார். இன்று (10.08.2019)மிகப்பிரம்மாண்டமாக இசை நிகழ்ச்சி நடத்த இருக்கும் ஏ.ஆர் ரகுமானிடம், “நிகழ்ச்சியில் இடம்பெறும் பாடல்களைப் பாடும்போது பாடல்களை எழுதியவர், பாடியவரை அடையாளப் படுத்துவது போல் தயாரிப்பாளரையும் அடையாளப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது நியாயமான கோரிக்கை தான். ஏ.ஆர் ரகுமான் செய்வாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up