Tamil Movie Ads News and Videos Portal

குடும்பக் கதையில் நடிக்கவிருக்கும் “விஜய்”

‘பிகில்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது தளபதி விஜய் ‘மாநகரம்’ ‘கைதி’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது “மாஸ்டர்” படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இதனையடுத்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தை வட்டமிடுகிறது. விஜய் அடுத்து மீண்டும்

முருகதாஸ் அல்லது அட்லி இயக்கத்தில் நடிக்கலாம் என்று ஒரு தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தாலும், தற்போது குடும்பப் பாங்கான படங்களை இயக்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபகாலத்தில் குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட கதையில் விஜய் நடிக்கவில்லை என்பதால் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு அதிகமிருப்பதாக தெரிகிறது. மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைசி இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதும் அவருக்கு சாதகமான விசயமாக மாறியிருக்கிறது.

Get real time updates directly on you device, subscribe now.

you're currently offline