Tamil Movie Ads News and Videos Portal

பெரியாரிடம் இருந்து முதலில் மாண்பைக் கற்றுக் கொள்ளுங்கள்


தன்னை ஒரு பெரியாரிஸ்ட் என்பதை கெத்தாகச் சொல்லிக்கொள்ளும் நடிகை குஷ்பூ பெரியாரிடம் உள்ள மாண்பை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை சமீபத்தில் அவரது ஆடியோ ஒன்று தெளிவுப்படுத்தி இருந்தது. பொதுவாக நாம் தனியாக ஒரு நபரிடம் பேசும்போது சில நபர்களை ஒருமையில் பேசுவோம் . அதே சமயம் பிறரிடமோ அல்லது பொதுவெளியில் பேசும்போதோ மரியாதைக் கொடுத்துப் பேசுவோம். இது இயல்பான ஒன்று. ஆனால் இதை ஒரு சாதாரண நபர் பேசினால் பெரிய விஷயமில்லை. குஷ்பூ போன்ற பிரபலங்கள் பேசும்போது வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்.

மிக முக்கியமாக பத்திரிகையாளர்களைப் பற்றி குஷ்பூ பேசிய வார்த்தைகள் நிச்சயமாக வலி ஏற்படுத்தக் கூடியவை. பத்திரிகையாளர்களுக்கு செய்தி தான் முக்கியம். அந்தச் செய்திகள் மூலம் தான் நடிகைகள் நடிகர்கள் மக்களிடம் சென்றடைந்தார்கள். சென்றடைகிறார்கள். அதுவும் குஷ்பூவின் வளர்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் பங்களிப்பு அதிகம். அதை அவரும் அறிவார். இப்போது குஷ்பூ மன்னிப்பு கேட்டிருக்கிறார். யாரோ அவரின் ஆடியோவை திரித்து அனுப்பி விட்டதாகவும் கூறி இருக்கிறார். முதலில் குஷ்பூ ஆடியோவில் கூறியிருப்பதே தவறு. இனி அத்தவறுகளை செய்யாதிருப்பாராக

Get real time updates directly on you device, subscribe now.

you're currently offline