Tamil Movie Ads News and Videos Portal

அகனள் என்ற வித்தியாசமான பெயருடன் ஒரு படம் தயாராக இருக்கிறது.

“சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் படப்பூஜையுடன் ஆரம்பமானது அகனள் திரைப்படம். இதை சைதன்யா சங்கரன் தயாரிக்கிறார். இந்தப்படத்தை எழுதி&இயக்கவிருக்கிறார் கார்த்திராம். இந்தப்படத்தின் கதை

“திருநங்கைகள் சம்பந்தப்பட்ட கதை. இந்தப்படத்தில் திருநங்கைகளுக்கு விளையாட்டில் தனி அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது பேசப்பட இருக்கிறது. இதில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமே படத்தின் மொத்த விஷயத்தையும் கொண்டு போகும். திருநங்கைகளுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இவ்வுலகில் கிடைப்பதற்கு பெரிய போராட்டமாகவே இருக்கிறது. அந்தப் போராட்டத்தை இப்படம் நேர்மையாக பேசும். திருநங்கைகளாக இருந்து சாதித்த அனைவரும் ஒரு பெரும் போராட்டத்திற்கு அப்புறம் தான் வெற்றியை அடைந்துள்ளார்கள்.

 

இந்தப்படம் பேசவிருக்கும் அரசியல் நிச்சயம் அரசாங்கத்தின் காதுகளுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கிறோம். படத்தின் பூஜை இருமாதங்களுக்கு முன்பே போடப்பட்டது. கோரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு வேகமாக நடைபெறவுள்ளது. இந்தக் கனமான கதை அம்சம் உள்ளப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கின்றனர்” என்றார் படத்தின் இயக்குநர் கார்த்திராம்.

Get real time updates directly on you device, subscribe now.