Tamil Movie Ads News and Videos Portal

மறைமுகமாக ஆதரிக்கிறார்களா அஜீத்தும் விஜய்யும்..!!?

உலக நாடுகள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத மகாமாரியான வைரஸுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க, இந்த அஜீத் விஜய் ரசிகர்கள் யாருக்கு என்னவானால் எங்களுக்கு என்ன..? என்கின்ற ரீதியில் டிவிட்டரில் இரண்டு நாள் அமைதிக்குப் பின்னர் மீண்டும் தங்கள் மல்லுக்கட்டை தொடங்கியுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அஜீத்தின் பிறந்தநாளை வைத்து மிகவும் கேவலமான, கண்ணியமற்ற டிவிட்டுகளை விஜய் ரசிகர்கள் உருவாக்கி, அதற்கு பதிலடி கொடுப்பதாய் நினைத்து அஜீத் ரசிகர்களும் எல்லை தாண்ட சமூக வலைதளங்கள் சாக்கடையாகின.

இதனையடுத்து பிற நடிகர் நடிகைகள் இந்த அறுவறுப்பைப் கண்டு முகம் சுளிக்க இருதரப்பும் அமைதியானது. தற்போது நிவாரண நிதி கொடுப்பதில் அஜீத் முந்திக் கொண்டார் என்பதை முன்னிட்டு மற்றொரு அநாகரீகமான சண்டையை தொடங்கியுள்ளனர். இத்தனை காலமாக நடந்து வரும் இந்த சண்டைகள் ஓய்ந்துவிட்டால், தங்கள் மார்க்கெட் சரிந்துவிடும் என்ற எண்ணத்தால் இந்த ரசிகர்களின் ரசனையற்ற போக்கை அஜீத், விஜய் இருவருமே விரும்புகிறார்களோ என்கின்ற எண்ணம் சாமானியனும்க்கும் வரத் தொடங்கிவிட்டது. அந்த எண்ணம் உண்மைதான் என்பதை சொல்லாமல் சொல்கின்றன இருவரின் மெளனமும்.

Get real time updates directly on you device, subscribe now.