அமைச்சர் ஆவாரா நடிகை ரோஜா..!?

அமைச்சர் ஆவாரா நடிகை ரோஜா..!?

நேற்று நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நேரத்தில் ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகளும் வெளியாகின. இதில் ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்குதேசம் ஆட்சியை இழந்து, ஜெகன் மோகன் ரெட்டியின் வொய். எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இதில் நடிகையும் முன்னால் நகரி தொகுதியின் எம்.எல்.ஏவும் ஆன ரோஜா மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து ஆளும் அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் அவரின் பெயரும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன. நடிகை ரோஜா ‘செம்பருத்தி’ என்ற தமிழ்ப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு மொழிப்படங்கள் உட்பட 72 படங்களில் நடித்தவர். பின்னர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலகியவர், அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்தவர், அங்கு தனக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி அக்கட்சியில் இருந்து விலகி ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸில் சேர்ந்தார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவான போராட்டங்களில் கலந்து கொண்ட போது, பலமுறை தாக்கப்பட்டதோடு, சிறைவாசமும் அனுபவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி தோல்வியடைந்த போதும், நகரி தொகுதியில் போட்டியிட்டு நடிகை ரோஜா வெற்றி பெற்றார். சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் குரலாக ஒலித்தார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். இதனால் கண்டிப்பாக ரோஜா அமைச்சரவையில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up