மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க..ஆர்டிகள் 15 யாரு நடிச்சா நல்லாருக்கும்?

மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க..ஆர்டிகள் 15 யாரு நடிச்சா நல்லாருக்கும்?

சில வாரங்களுக்கு முன் வெளியாகி தேசமெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட ஹிந்தி படம் ஆர்ட்டிகள் 15. சாதியப்பிரிவினையை செவிட்டில் அடித்தாற்போல போல்டாக பேசிய படம் அது. இப்படத்தை அனுபாவ் சின்ஹா இயக்கி இருந்தார். ஆயுஷ்மான் நடித்த இப்படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை தமிழில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற விவாதம் கிளம்பி இருக்கிறது. தமிழில் உள்ள சில நடிகர்களும் இப்படத்தை ரிமேக் செய்து நடிக்க விரும்புவதாகவும் தகவல். விஜய், அஜித், சூர்யா மூவரில் யார் நடித்தாலும் இந்தப்படம் கெத்தாக இருக்கும் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள். ஆனால் ஆர்வமிகுதி கொண்ட ரசிகர்கள் அவரவர்களின் விருப்பப்பட்ட நடிகர்கள் எல்லோர் பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் நடித்தால் தான் எடுபடும் என்று சொல்லி வருகிறார்கள். ஒரு திரைப்பட விமர்சகர் ஒருவரிடம் இதைப்பற்றி நாம் கேட்ட போது அவர், “மனசாட்சியைத் தொட்டுச் சொல்றேன். தமிழ்ல இப்படத்திற்கு முதல் சாய்ஸ் சூர்யா தான்” என்றார். விஜய் இரண்டாவது சாய்ஸ், அஜித் மூன்றாவது சாய்ஸ். தனுஷுக்கு எடுபடுவது கஷ்டம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up