Asuran

Follow
8

Great

9.4

User Avg

அசுரனுக்கு வசந்தபாலன் சூட்டிய மகுடம்

அசுரனுக்கு வசந்தபாலன் சூட்டிய மகுடம்

நேற்று வெளியான அசுரன் படம் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்று இயக்கநர் வசந்தபாலன் தனது முகநூலில் அசுரன் படம் ஏற்படுத்திய தாக்கத்தை எழுதியுள்ளார்

“அசுரன் திரைப்படம் பார்த்தேன்.கரிசல் மண்ணோடு கலந்து கிடக்கிற பகையையும், வன்மத்தையும், அதிகாரத்தின் கைகளில் நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கோபத்தையும் பூமணியின் எழுத்துகள் ஆணித்தரமாக ஒலிக்க அதை தனுஷ் என்கிற நடிப்பு அசுரனுடன் இணைந்து வெற்றிமாறன் திரைக் கவிதையாக ஆக்கியுள்ளார்.தனுஷ் மிக மிக மிக பிரமாதமான நடிப்பை வழங்கியுள்ளார். பூமணியின் வெக்கை நாவலை வெற்றிமாறன், மணிமாறன் மற்றும் சுகாவுடன் இணைந்து நேர்த்தியான திரைக்கதையாக வடிவமைத்துள்ளார்.ஜிவியின் இசையில் பாடல்கள் மண்ணின் மணத்தை நமக்கு கடத்துகிறது.பின்னணி இசை அந்த கொலைப் பதட்டத்தை நமக்குள் இடையறாது ஏற்படுத்தியவண்ணம் இருக்கிறது.விரிவாக பேச நிறைய இருக்கிறது.வெற்றி ,தனுஷ், ஜிவிபி உள்ளிட்ட மொத்த குழுவிற்கும் என் மனம் கனிந்த வாழ்த்துகள்”

-வசந்தபாலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up