ஆட்சி அமைத்த 5 முதல்வர்களுடன் நடித்த ஒரே ஆச்சி

ஆட்சி அமைத்த 5 முதல்வர்களுடன் நடித்த ஒரே ஆச்சி

ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை மனோரமாவுக்கு உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியுடன் நாடகங்களிலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்.டி.ராமாராவ் ஆகியோருடன் சினிமாவிலும் மனோரமா நடித்துள்ளார்.

இரண்டு வயது மழலையிலேயே பாட ஆரம்பித்து விட்ட மனோரமா, சுமார் நூறு பாடல்களை தனது சொந்தக் குரலிலேயே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோரமா, தன் வாழ் நாளில் 1300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். உலக சினிமா சரித்திரத்தில் யாரும் தொடாத எண்ணிக்கை இது. இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அவரது இந்தச் சாதனையை ஒருவரால் மட்டுமே முறியடிக்க முடியும். அந்த ஒருவர் வேறு யார்? மனோரமாவேதான். மருபடியும்… அவர் பிறந்து வந்து இந்த சாதனையை முறியடிக்க பிரார்திப்போம்!

ஆச்சி

எல்லோரும் மனோரமாவை அன்புடன் அழைப்பது ‘ஆச்சி’ என்று. இதற்குப் பின்னணி உண்டு. இவர் வளர்ந்தது செட்டி நாட்டில். 1962ல் சுகி. சுப்பிரமணியத்தின் ‘காப்பு கட்டி சத்திரம்’ என்ற ரேடியோ நாடகம் 66 வாரம் ஒலிபரப்பப்பட்டது. இதில் மனோரமா நடித்தார். நாடகத்தில் இவர் செட்டிநாட்டுப் பாணியில் பேசுவார். இதனால் ஏவிஎம் ஸ்டூடியோவின் மேக்அப் மேன் இவரை விளையாட்டாக ‘ஆச்சி’ என்று அழைக்க ஆரம்பித்தார். அதன் பிறகு எல்லோரும் இவரை ‘ஆச்சி’ என்று அழைக்க ஆரம்பிச்சாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up