Tamil Movie Ads News and Videos Portal

மீண்டும் காக்கி யூனிபார்மில் அதர்வா

நடிகர் அதர்வா சென்ற ஆண்டு வெளியான “100” திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் பெரிதாக பேசப்படவில்லை. தற்போது மீண்டும் அவர் ஒரு புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். இயக்குநர் பூபதிபாண்டியனின் உதவியாளர் ரவீந்திரப் பிரசாத் இப்படத்தை இயக்கவுள்ளார். குளோபல் இண்ஃபோடெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். படம் குறித்து இயக்குநர் கூறும் போது, இப்படத்தின் கதையை எழுதும் போது, இதில் அதர்வா தான் நாயகனாக நடிக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன். கதையைப் படித்த அதர்வாவும் படம் பண்ணலாம் என்று கூறிவிட்டார். ஆனால் தொடர்ச்சியாக அவர் பிற படங்களில் நடித்து வந்ததால் நான் இரண்டு ஆண்டுகாலம் அவருக்காக காத்திருந்தேன். இப்பொழுது படத்தை தொடங்கவிருக்கிறோம். படம் பிப்ரவரியில் வெளியாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.