inbaraja

“உள்ளம் தொட்ட உலகப்படங்கள்” படம் #4 “Spring summer fall winter and spring”

Spring summer fall winter and spring: வாழ்க்கை எதனால் ஆனது என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.. என்று எங்களுக்குத் தெரியாது… கிம் கி டுக் என்ன சொல்கிறார் தெரியுமா…? நம் வாழ்க்கை அன்பாலும் அறியாமையாலும் ஆசைகளாலும் ஏமாற்றங்களாலும் கோபங்களாலும் காதலாலும் காமத்தாலும் வெறுப்பினாலுமானது என்கிறார்… குறிப்பாக இன்னும் இரண்டையும் சேர்த்துக் கொள்ளச் சொல்கிறார்.. அது பிழை மற்றும் குற்றவுணர்ச்சி… ஆம் வாழ்...[Read More]

“ஒளிவுதிவசத்தே களி” – ஒரு பார்வை

தமிழில் சில திரைப்படங்களை நாம் பரிசோதனை முயற்சி திரைப்படங்கள் என்று கூறிக் கொள்கிறோம். உதாரணமாக ‘ஆரண்ய காண்டம்’ ‘மூடர் கூடம்’ ‘அருவி’ ‘சூது கவ்வும்’ ஆகிய திரைப்படங்களைக் கூறலாம். ஆனால் உலகளவில் சில திரைப்படங்களைப் பார்க்கும் போது, உண்மையாகவே நாம் எடுத்துக் கொண்டிருப்பது பரிசோதனை முயற்சி திரைப்படங்கள் தானா..? என்கின்ற கேள்வி எழும். அப்படங்களைப் பார்க்கும் போது தான், உண்மையாகவே நாம் எடுத்துக் கொண்டி...[Read More]

“உள்ளம் தொட்ட உலகப்படங்கள்” படம் #3 Where is my friends Home

Where is my friends Home உலக சினிமா வரலாற்றில் எப்பொழுதுமே ஈரானிய திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. ஏனென்றால் அவர்கள் திரைப்படங்களின் வாயிலாகப் பேசும் அரசியலும், வாழ்வியலும் உலகின் எந்த மூலையில் உள்ள பார்வையாளர்களாலும் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய தன்மையில் இருப்பது தான் தனிச்சிறப்பு வாய்ந்த இடம் அவர்களுக்கு கிடைத்திருப்பதற்குக் காரணம். அதிலும் ஈரானிய இயக்குநர்கள் திரையில் விரித்துக் ...[Read More]

‘’உள்ளம் தொட்ட உலகப்படங்கள்’’ படம் #2 TANGERINE

(இத்திரைப்படம் மூன்று ஐ-போன் 5S செல்போன் கேமராக்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்பதும், இதன் மொத்தப் படச்செலவு இந்திய மதிப்பில் 60 இலட்சம் ரூபாயை உள்ளடக்கியது என்பதும், சிறிய அளவில் மட்டுமே ரீலீஷ் செய்யப்பட்ட இப்படத்தின் வசூல் 6கோடி என்பதும் இப்படம் குறித்த மேலதீக தகவல்கள். குறுகிய பட்ஜெட்டில் படம் எடுக்க விரும்பும் இளம் இயக்குநர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்..) பெரும்பாலும் நாம் கண்ட...[Read More]

SANJU – ஒரு பார்வை

ஒரு திரைப்படத்தின் வலிமையை பறை சாற்றியிருக்கிறது “SANJU” திரைப்படம். முன்னாபாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், பி.கே போன்ற புகழ் பெற்றத் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதுவரை நாம் எத்தனையோ விதமான பயோஃபிக் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். அவை அனைத்துமே சமூகத்தால் போற்றப்பட்ட, சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பேசும் திர...[Read More]

‘’உள்ளம் தொட்ட உலகப்படங்கள்’’ படம் #1 BABEL

BABEL Babel  என்று ஒரு மெக்சிகன் மொழி திரைப்படம். அதை மெக்சிகன் மொழி திரைப்படம் என்றும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அதன் கதைக்களம் மெக்சிகோ, யு.எஸ், மொராக்கோ, ஜப்பான் ஆகியவற்றில் நடக்கும் இருவேறு நிகழ்வுகளைக் கொண்டு பின்னப்பட்டு உள்ளது. எனவே அந்தந்த இடங்களுக்கு ஏற்ப அவர்கள் அதற்குரிய மொழியை பேசுகின்றனர். இதன் இயக்குநர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் . இவரது முக்கியமான மற்றொரு திரைப்படம் தான்  ”ame...[Read More]

விண்ணைத் தாண்டி இணையும் கெளதம்-சிம்பு கூட்டணி.

சிம்புவின் நடிப்பு கேரியரில் மிக முக்கியமான திரைப்படங்களை வரிசைப்படுத்தினால் அதில் முதல் மூன்று படங்களுக்குள் கண்டிப்பாக “VTV” என்று சுருக்கமாக அழைக்கப்படும் “விண்ணைத் தாண்டி வருவாயா” திரைப்படத்துக்கு இடம் உண்டு. அதில் இடம் பெற்ற “கார்த்திக் – ஜெஸ்ஸி” இருவருக்குமான காதல் காதலர்களிடையே காவியமாகக் கொண்டாடப்பட்டது நினைவிருக்கலாம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்படவிருப்ப...[Read More]

விஷ்ணு விஷால் – ராணா இணையும் “காடன்”

கயல், தொடரி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரபு சாலமன் கும்கி-2 திரைப்படத்தை இயக்கி வந்தார். அதை இயக்கி வந்த கையோடு சத்தமில்லாமல் ஹிந்தியில் வெளியாகி ஹிட்டடித்த “ஹாதி மெரே சாதி” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்பையும் இயக்கி வந்தார். இதில் முதன் முறையாக விஷ்ணு விஷால், ராணா இருவரும் இணைந்து நடித்து வந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50% முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தெலுங்குப்...[Read More]

”நான் இன்னொரு சாவித்திரி ஆகாமல் தப்பினேன்” – சமந்தா.

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் “நடிகையர் திலகம்” என்ற பெயரில் சமீபத்தில் வெளியாக வெற்றி பெற்றது. இப்படத்தில்  நடிகை சாவித்திரியைப் பற்றி கவர் ஸ்டோரி எழுதும் ரிப்போட்டராக சம்ந்தா நடித்திருந்தார். அப்படத்தில் நடித்தது தொடர்பாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட சமந்தா “படத்தில் நடிக்கும் போது எனக்கு ஏதோ என் சொந்த வாழ்க்கையில் நடித்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. நானும...[Read More]

சூர்யாவுடன் இணைய இருக்கும் இயக்குநர்கள் பட்டியல்.

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் NGK திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவின் 36வது படம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு 50 நாட்கள் முடிவடைந்துவிட்டது. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு மீதமிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சூர்யா இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒ...[Read More]

துருவ நட்சத்திரம் டீஸரை வெளியிட்டது யார்..?

விக்ரம் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் “துருவ நட்சத்திரம்’. இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி 12 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. படத்தில் நாயகன் விக்ரம் உளவுத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆனால் படக்குழுவோ இப்பொழுது வேறொரு உளவு வேலையில் இறங்கியிருக்கிறது. அது டீஸரை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிடும் முன், திரு...[Read More]

தவறான விஷயங்களுக்காக யாரும் என்னை அணுகியதில்லை – நிவேதா பெத்துராஜ்.

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நாயகி நிவேதா பெத்துராஜ். இவர் இப்பொழுது ஜெயம் ரவி ஜோடியாக நடித்திருக்கும் திரைப்படம் “டிக் டிக் டிக்”. இப்படம் இந்தியாவில் முதன்முதலாக உருவாகும் விண்வெளிப்படம் என்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் தொடர்பாக நிவேதா பெத்துராஜ் பேசும் போது, “எனக்கு இப்படத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவம். சில ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் ...[Read More]

Lost Password

Sign Up