பிகில் 250 கோடியா? இங்க என்னய்யா நடக்குது

பிகில் 250 கோடியா? இங்க என்னய்யா நடக்குது

பிகில் வந்ததும் வந்தது நாட்டுல ஆளாளுக்கு வசூல் நிலவரம் சொல்றவங்களா மாறிட்டாங்க

சமீபகாலமாக ஒருநாளில் நூறுகோடி வசூல் என்ற வார்த்தையை மிகச்சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள். அட என்னப்பா நூறுகோடின்னா ஏதோ மூக்குப்பொடி மாதிரி சாதாரணமா ஆயிடிச்சான்னு நடுநிலை மக்கள் வருத்தப்பட்டு உண்மையை அறிய நினைக்கிறார்கள். ஆனால் யார் சொல்வது உண்மை என்பது தான் கடுங்குழப்பமாக இருக்கிறது. ட்விட்டரில் தளபதி பிகில் படம் மூலமாக 250 கோடி வசூலை தாண்டிவிட்டார் என்று கொளுத்திப் போட்டுவிடுகிறார்கள். அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்து வருகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் தான் உண்மை நிலவரத்தைச் சொல்ல முடியும் என்று சொன்னால் சிலர் கலவரம் ஆகிவிடுகிறார்கள். இருந்தாலும் இணையத்தில் ஒருசிலர் கொடுக்கிற டேட்டா சரியாக இருக்கிறது. பட் இதுவரை வந்த டேட்டா எதுவும் சரியானதாக இல்லை என்பதே நிஜம்.. அதனால் இன்னும் பிகில் வசூல் நிலவரம் திகில் நிரம்பியதாகத் தான் இருக்கிறது. விஜய்யின் அதி தீவிர ரசிகர்கள் ட்வீட்டர்களின் 250 கோடி 300 கோடி மேட்டர்ஸை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு “பார்த்தியா என் தலைவன் கெத்த” என்று உதார்விடுவதைப் பார்க்கும் போது பாவமாகத்தான் இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up