பிகில் படம் முழுதும் விஜய்யோடு பயணிக்கும் காமெடியன் யார் தெரியுமா?

பிகில் படம் முழுதும் விஜய்யோடு பயணிக்கும் காமெடியன் யார் தெரியுமா?

நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் பிகில் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக விஜய்யின் போர்ஷன் முழுதும் இன்றோடு நிறைவடைகிறதாம். மேலும் படத்தில் பணிபுரிந்த 400 தொழிலார்களுக்கும் நடிகர் விஜய் தனித்தனியாக நன்றி சொல்லியுள்ளார். இந்நேரத்தில் படம் பற்றி இன்னொரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. பிகிலில் விவேக், யோகிபாபு, ஆனந்த்ராஜ் ஆகியோர் காமெடிக்கு இருக்கிறார்கள். இவர்களில் படம் முழுதும் விஜய்யுடன் பயணிக்கும் காமெடி நடிகர் யார்? என்ற எதிர்பார்ப்பிற்கு இன்று பதில் கிடைத்துள்ளது. நடிகர் ஆனந்த்ராஜ் தான் விஜய்யோடு படம் நெடுக வரவிருக்கிறார். 1990 காலகட்டத்தில் பயங்கர வில்லனாக மிரட்டிய ஆனந்த்ராஜ் இப்போது பயங்கர காமெடியனாக கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான ஜாக்பாட் படத்தில் இவரின் காமெடி தான் எடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சோ பிகிலில் நிறைய பிகில் ஆனந்த்ராஜ் காமெடிக்கு கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up