சென்சாரின் அங்கீகாரம்! சிக்ஸர் படம் அடித்த முதல் சிக்ஸர்

சென்சாரின் அங்கீகாரம்! சிக்ஸர் படம் அடித்த முதல் சிக்ஸர்

சென்சார் சர்டிபிகேட் கூட ஒரு படத்தின் எதிர்பார்ப்பை தூண்டச் செய்கிறது. ஒரு படத்திற்கு யூ சர்டிபிகேட் கிடைத்தால் அப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு சேப்டி மனநிலைக்கு வந்துவிடுகிறார். சமீபத்தில் சிக்ஸர் படத்திற்கு யூ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. அது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் கூறியதாவது,

“கதையை கேட்டக் மாத்திரத்திலேயே இந்த கதை எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படம் என்பதையும், அதற்கான தர சான்றிதழையும் பெறும் என்பதில் உறுதியாக இருந்தேன். குடும்பத்தோடு திரை அரங்குக்கு வரும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ள அறிமுக இயக்குனர் சாச்சியின் இந்த கதை ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.கதாநாயகன் வைபவுக்கு ஏற்ற கதாபாத்திரம். நகைச்சுவை மிளிர நடிப்பதற்கு ஒரு தனித்துவமான திறமை வேண்டும், அதில் வைபவ் மிக மிக திறமையானவர். தயாரிப்பாளராக நானும் எனது நண்பர் ஸ்ரீதரும் படத்தை பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைந்தோம். அந்த மகிழ்ச்சி ரசிகர்களுக்கும் கிட்டும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன்
அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில், தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் தங்களது “வால் மேட் என்டேர்டைன்மெண்ட்” என்கிற புதிய நிறுவனத்தின் சார்பில் , ட்ரிடென்ட ஆர்ட்ஸ் ரவீந்திரன் உடன் இணைந்து தயாரிக்கும் “சிக்சர்” படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான். பி ஜி முத்தையா ஒளிப்பதிவில்,ஜோமின் படத்தொகுப்பில்,பசர் என்கே ராகுல் கலை வண்ணத்தில், சாம் மற்றும் ராம்குமார் நடனம்.இயக்க, ஜி கே பி,லோகன், அன்பு ஆகியோர் பாடல் இயற்றி இருக்கிறார்கள்.

கதாநாயகியாக பல்லோக் லாலவானி நடிக்க ராதா ரவி, இளவரசு,சதீஷ், ராமர், மற்றும் ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up