Comali

Follow
6

Fair

கோமாளி இயக்குநரின் விஸ்வாசம்

கோமாளி இயக்குநரின் விஸ்வாசம்

வெளியாகும் முன்பே ஒரு பாசிட்டிவ் வைப்ரேசனைப் பெற்று இருக்கிறது ஜெயம்ரவி நடித்துள்ள கோமாளி படம். இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதனுக்கு இது முதல்படம். ட்ரைலருக்கு கிடைத்த ரெஸ்பான்சால் மகிழ்ந்து இருக்கும் அவர் மகிழ்ச்சியோடு படம் பற்றி பகிர்ந்து கொண்டார்.

” இந்த புகழ் மற்றும் பாராட்டு அனைத்துமே எனக்கு உரியவை அல்ல. எங்கள் குழுவினர் அனைவருக்குமே உரியதானது.ஜெயம் ரவி முதல் காஜல் அகர்வால், ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட அனைவருக்கும் உரியது. இக்கட்டான , சவாலான நேரங்களில் இவர்கள் மூத்தவர்களாக எனக்கு கொடுத்த தைரியம் மற்றும் ஊக்கம் மறக்க முடியாதது.என்னை போன்ற அறிமுக இயக்குனரை துணிந்து அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர் ஐசரி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் என் நன்றி உரியது. குறிப்பாக என் கலை இயக்குனர் , மற்றும் அவரது குழுவினருக்கு உளமார்ந்த நன்றி. குறிப்பாக அந்த சென்னை வெள்ள காட்சிகளில் அவர்களது உழைப்பும், திட்டமிடுதலும் சொல்லில் அடங்காதவை. படத்தின் வெள்ளோட்டம் (ட்ரைலர் ) ரசிகர்களுக்கு படம் எதை பற்றியது என்பதை தெளிவாக கூறி விட்டது.
படத்தின் மைய கருத்து 90ஸ் கிட்ஸ் எனப்படும் 90 இல் பிறந்த இளைஞர்களின் சாதனையையும் , அவர்களின் தற்போதைய அனுசரிப்பை பற்றியும் பேசும். இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும் ” என்கிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவர உள்ள “கோமாளி” படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளி இடுகிறது. ஜெயம் ரவி , காஜல் அகர்வால் இணையாக நடிக்க சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்க , ஹிப் ஹாப் ஆதி இசை அமைப்பில் , வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up