Comali

Follow
6

Fair

கோமாளி படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம்

கோமாளி படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம்

ட்ரைலரிலே அல்லுசில்லு கிளப்பிய ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படம் சென்னையில் சில திரையரங்குகளில் இன்று காலை 5 மணி காட்சியிலே வெளியாகி விட்டது. படத்தை ரசிகர்கள் ஆர்வத்தோடு வந்து பார்த்தார்கள். 90ஸ் கிட்ஸ் சம்பந்தப்பட்ட கதை என்பதால் சென்னை ரோகிணி தியேட்டரில் நிறைய 90ஸ் கிட்ஸைப் பார்க்க முடிந்தது. படத்தைப் பார்த்து விட்டு வெளியில் வந்த ரசிகர்கள் வெளியில் நின்றிருந்த மீடியா மக்களுக்கு படம் பற்றிய தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். பெரும்பாலான ரசிகர்களின் கருத்து, “படம் எங்குமே போரடிக்கவில்லை. மேலும் கதையை விட கலகலப்பு பஞ்சம் இல்லாமல் இருப்பதால் நிச்சயம் பேமிலியோடு வந்து பார்க்கலாம்” என்றார்கள். பொதுவாகவே ஜெயம்ரவிக்கு பேமிலி ஆடியன்ஸ் நிறைய உண்டு. அதனால் கோமாளியைக் காண திரையரங்குகள் நோக்கி தமிழக குடும்பங்கள் படையெடுக்கும் என நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up