Tamil Movie Ads News and Videos Portal

இசையில் தொடங்குதம்மா சி.வி குமார் டைட்டானிக்

ஒரு காலத்தில் சூப்பர் குட் கம்பெனி படம் என்றால் குடும்பத்தோடு போகலாம் என்று பேச்சு உண்டு. நிகழ்காலத்தில் சிவி குமார் தயாரிக்கும் படங்கள் என்றால் நிச்சயம் டிபெரண்ட் ஸ்டோரியாக இருக்கும் என இளைஞர்கள் தானாகவே முடிவெடுத்துக் கொள்கிறார்கள். அந்தளவிற்கு சி.வி குமார் தனது புரொடக்‌ஷனை யூனிக்நெஸ்-ஆக வைத்துள்ளார். தொடர்ந்து ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் படங்களைத் தந்து கொண்டிருந்த சி.வி குமார் இடையில் இரண்டு படங்களை இயக்கவும் செய்தார்.

தற்போது சிறிய இடைவெளிக்குப் பின் டைட்டானிக் என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கலையரசன் கயல் ஆனந்தி நடித்துள்ளனர். ஜானகிராமன் எழுதி இயக்கி இருக்கிறார். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை விழாவில் மேடையில் படத்தின் பாடல்களை லைவ்-ஆக பாடி ஒரு மினி கச்சேரியையே நடத்திவிட்டது சி.வி குமார் புரொடக்சன். படம் மீதான நம்பிக்கையில் படத்தின் புரோமோஷனை சிவி இசையில் இருந்து துவங்கி இருக்கிறார்

Get real time updates directly on you device, subscribe now.

you're currently offline