Dear Comrade

Follow
6.5

Fair

Dear Comrade Review

Dear காம்ரேட்- விமர்சனம்

சிகப்புக் குறியீடுகள் அதிகம் இருப்பதால் மார்க்‌சியம் பற்றியப் படம் என்றால் அதுவல்ல மக்களே. இது பக்கா காதல் காம்ரேட். காம்ரேட் என்ற பெயர் ஒருவனுக்கு வருகிறது என்றால் அவன் அடக்குமுறைகளையும் அநீதியையும் நேர்மையான முறையில் எதிர்ப்பவர்க்கு இறுதிவரை உடன் இருந்து தோள் கொடுக்க வேண்டும். அவன் தான் காம்ரேட். அட்டகாசமான லைன் பிடித்த இயக்குநர் பிரம்மாண்டமாக அதை காட்சிமொழியில் வெளிப்படுத்தா விட்டாலும் குறை ஒன்றுமில்லை.

தொட்டா ஷாக் அடிக்கிற மாதிரி உள்ள தேவரகொண்டாவுக்கு ரஷ்மிகா மேல் காதல் வருது. அக்காதலில் பிரச்சனை வந்து தேவரகொண்டா மீண்டு வந்தபின் காதலிக்குப் பிரச்சனை வருது. காதலியின் லட்சிய இலக்கை அப்பிரச்சனை சீர் குலைக்க, அதை நேர் செய்ய தோள் கொடுக்கிறான் தோழன். முடிவில் சுபம்.

படத்தின் இரண்டாவது ஹீரோ தான் விஜய்தேவரகொண்டா எனும் ரேஞ்சிக்கு தன் நடிப்பால் முதலிடம் பிடிக்கிறார் ஹீரோயின் ரஷ்மிகா. ஒவ்வொரு பிரேமிலும் அசத்தலான பெர்பாமன்ஸை வெளிப்படுத்துகிறார். விஜய்தேவரகொண்டா அடக்கி வாசித்தாலும் அடக்க முடியாத கோபம் வெளிப்படும் நேரத்தில் எல்லாம் அர்ஜுன் ரெட்டியை நினைவுப்படுத்துகிறார். மற்ற சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ் யாவரும் கதைக்கு தங்கள் நடிப்ப சப்போர்ட் பண்ணி இருக்கிறார்கள். பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவைப் பற்றி தனிப்பதிவு போடும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு காதல் பாடல் மட்டும் நெஞ்சை இதப்படுத்துகிறது. தமிழ் வசனங்களும் அதை திரையில் இவர்கள் உச்சரிக்கும் பாங்கும் தான் நம்மை எச்சரிக்கிறது.

ஒரு பக்கா பொலிட்டிகல் மூவி எதிர்பார்ப்பவர்களுக்கு காதல்பட அனுபவம் கிடைக்கும். ஒரு பக்கா காதல் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு குட்டிப் பொலிட்டிகல் பட அனுபவம் கிடைக்கும். படம் இறுதியில் பேசி இருக்கும் பெண்ணிய மேட்டர் ஆல்ரெடிப் பேசப்பட்டதாக இருந்தாலும் இது தொடர்ச்சியாக பேச வேண்டிய விசயம் தான் எனும் வகையில் சமாதானம் தருகிறது. படத்தின் நீளம், ஆழமே இல்லாத அதிகாரப் பிரயோகம் போன்ற சிலசில சோர்வுகள் இருந்தாலும் படம் இறுதியில் முன் வைக்கும் தீர்வு பெண் பிள்ளைகள் பெற்ற தகப்பன்களை ஹார்ட்டீன் விட வைக்கிறது. லவ் யூ காம்ரேட்!

-மு.ஜெகன்சேட்

 

Lost Password

Sign Up