டைரக்டர் கே.சுப்பிரமணியம் பர்த் டே டுடே

டைரக்டர் கே.சுப்பிரமணியம் பர்த் டே டுடே

தயாரிப்பாளரும் டைரக்டரும், நடிகருமான கே. சுப்பிரமணியம் இருபது படங்களுக்கு மேல் தயாரித்தவர்.

திரையுலகில் புகழ் பெற்ற பலர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். எம். கே. தியாகராஜா பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி, எம். எஸ். சுப்புலட்சுமி, ரீ. ஆர். ராஜகுமாரியும், பாபநாசம் சிவன், சரோஜாதேவி ஆகியோரை உதாரணமாகக் கூறலாம்.

டி. கே. பட்டம்மாள் முதலில் பின்னணி பாடிய படம் சுப்பிரமணியத்தின் ‘தியாக பூமி’.

இவரோட ஒய்ஃப் மீனாட்சி திரையுலகில் முதலாவது பெண் பாடலாசிரியர். பரதநாட்டிய மேதை பத்மா சுப்பிரமணியம் இவரது மகள். ‘கீதா காந்தி’ என்ற தனது படத்தில் மகள் பத்மாவை நடனமாட வைத்தார்.

இவரால் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட எல்லோரும் நன்கு சோபித்தார்கள்.

கே. சுப்ரமணியத்தின் இடைவிடாத முயற்சியின் பயனாய்தான் 1939 ஆம் ஆண்டு ஏப்ரலில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தோன்றியது.

இவர் படங்களின் புரொமோஷனுக்காக தியேட்டரில் படத்தின் இடைவேளைக் காட்சியின் போது அவர் படத்தின் நடித்த நடித்த நடிக், நடிகையர்கள் நேரில் தோன்றி ரசிகர்களுக்கு காட்சியளிக்க வைத்தார்.

திரையுலகில் பல சாதனைகளை புரிந்த இயக்குனர் கே.சுப்ரமணியம் 1971 ஆம் ஏப்ரல் மாதம் 7ம் நாள் சென்னையில் மரணமடைந்தார்.

சுப்பிரமணியத்தின் சடலத்தை தாங்கிய பல்லக்கை எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சுமந்தனர். ஊர்வலம் அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்குப் பின்புறம் உள்ள மயானத்தை அடைந்தது. அங்கே சுப்ரமணியம் உடல் மீது ரோஜா மாலை வைத்து எம்.ஜி.ஆர். அஞ்சலி செலுத்தினார். நடிகர் சந்திரபாபு ஜெபம் செய்தார். அவரது இறுதிச்சடங்குகளை மத்திய அரசின் செய்திப் படப் பிரிவினர் படம் எடுத்தாங்களாக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up