Tamil Movie Ads News and Videos Portal

காதல் கோட்டை வாரிசின் கனவுக் கோட்டை

தல அஜித் தேவயானி நடிப்பில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் வெற்றியைக் கொடுத்த திரைப்படம் “காதல் கோட்டை”. இப்படத்தை இயக்கிய இயக்குநர் அகத்தியனின் மூன்றாவது மகள் தான் நிரஞ்சனி. இவர் தான் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர். இவர் ஏற்கனவே கபாலி, கதகளி, காவியத் தலைவன், பென்சில், சிகரம் தொடு ஆகிய படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார். இப்படத்திலும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றத் தான் முதலில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

 

ஆனால் இவரைப் பார்த்த இயக்குநர் படத்தில் இரண்டாவது கதாநாயகி ‘திமிராக நடந்து கொள்பவள்; அந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் சரியாக இருப்பீர்கள் “ என்று கூறி நடிக்க வைத்துவிட்டார். இப்படத்தில் நடித்து அதற்கு கிடைத்த வரவேற்ப்பை பார்த்தப் பிறகு நிரஞ்சனிக்கு தொடர்ச்சியாக நடிக்க ஆசை வந்துவிட்டதாம். இனி காஸ்டியூம் டிசைனிங் பணியோடு நடிப்பையும் தொடர முடிவு செய்திருப்பவர், அது குறித்துக் கூறும் போது, “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கொஞ்சம் கிளாமராக நடித்தேன். இனியும் கதைக்கு கவர்ச்சி தேவைப்படும் போது அவ்வாறு நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.