Tamil Movie Ads News and Videos Portal

இணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்

ஒரு படைப்பு மக்களின் நலம் சார்ந்ததாக இருக்கும் போது நிச்சயமாக அது பேசப்படும். அப்படி அதிகம் மக்களால் கொண்டாடப்பட்ட வெப்சீரிஸ் தான் எமெர்ஜென்சி. எமெர்ஜென்சி என்ற வார்த்தை இன்றைய சூழலில் மிக முக்கியமானது, ஹெல்த் சம்பந்தமாக நமக்கு எந்த எமெர்ஜென்சி சூழலும் வரக்கூடாது என்ற அவெர்னெஸோடு தயாரிக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ்
“புட் சட்னி” என்ற யூடியூப் தளத்தில் மாபெரும் வெற்றியைக் கண்டது. மொத்தம் எட்டு எபிசோட்-களை கொண்ட இந்த சீரிஸ் ட்ரெண்டிங்கில் இருந்தது, மிக முக்கியமாக முதல் நான்கு எபிசோட்கள் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது

சிதம்பரம் மணிவண்ணன் இயக்கத்தில் நல்ல நோக்கத்தோடு வெளியான இந்த சீரிஸில் மாபியா படத்தில் நடித்திருந்த ‘புட் சட்னி’ தீப்ஷீ ,கோமாளி படம் மூலம் அடையாளம் பெற்ற ஆர்.ஜே.ஆனந்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் முக்கியமான கேரக்டரில் கலைமாமணி கு.ஞானசம்பந்தம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். குருசங்கர் அவர்களும் நடித்திருந்தனர். மிகச்சிறந்த இயக்கத்திற்கு துணையாக இருந்தவர் இந்த சீரிஸின் கேமராமேன் சத்யா வெங்கட்ராமன்.

இந்த வெப்சீரிஸ் தாங்கி நின்றது எழுத்து என்றால் மிகையாகாது. இந்த வெப் சீரிஸில் நடித்ததோடு மட்டுமல்லாமல் கதை உருவாக்கமும், எழுத்தும் திரு. ராஜ்மோகன் ஆறுமுகம்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல காட்சிகள் இந்த சீரிஸில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இன்றளவும் தங்களை ஒரு மருத்துவராக பாவித்துக்கொண்டு பின்விளைவுகளை யோசிக்காமல் தனக்குத் தானே சிலர் வைத்தியத்தைச் செய்துகொள்கிறார்கள். அதனால் பல பின்விளைவுகளும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. தெரியாத மருத்துவ முறைகளை தாமே செய்வது பேராபத்து என்பதை இந்த வெப்சீரிஸ் ஆணித்தனமாக உணர்த்தியது வெகு சிறப்பு.
கூடுதல் வசனங்களை ராஜ்கமல் பாரதி எழுதியுள்ளார், இந்த சீரிஸ் தரும் உணர்வுகளை இசை வழியாக சரியாக கடத்திய இசை அமைப்பாளர் சூப்பர் சிங்கரில் பங்குபெற்ற K C பாலசாரங்கன்.

இந்த சீரிஸின் நிர்வாகத்தயாரிப்பில் உறுதுணையாக இருந்தவர்கள் “Damirican Cinema” சார்பில் கவின் கிருஷ்ணராஜ் மற்றும் சீரிஸின் இயக்குநரான சிதம்பரம் மணிவண்ணன். இயக்குநர் ஏற்கெனவே திரைத்துறையிலும் விளம்பரத்துறையிலும் திறம்பட பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவர் தனது டீமோடு இணைந்து ஸ்ட்ரீமிங் தளத்திலும் தடம் பதித்துள்ளார். ஹாட்ஸ்டார் தளத்தில் ஒரு வெப்சீரிஸ் மற்றும் ஒரு காமெடி சோவும், அமேசான் ப்ரைம் தளத்தில் இரு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியையும் மிகச் சிறப்பாக உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.

எமர்ஜென்சி படப்பிடிப்பு முழுவதும் மதுரையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் 10நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது,
இன்று கொரோனா அச்சத்தில் ஆளுக்கொரு மருத்துவம் சொல்லி வரும் நிலையில் நாம் அவசியம் காண வேண்டிய ஒரு படைப்பாக இருக்கிறது எமெர்ஜென்சி.

Get real time updates directly on you device, subscribe now.

you're currently offline