இங்கு கண்ணீரையும் பதிவு செய்ய வேண்டிய இருக்கு- சினேகன் உருக்கம்

இங்கு கண்ணீரையும் பதிவு செய்ய வேண்டிய இருக்கு- சினேகன் உருக்கம்

கதைத்திருட்டை மையமாக கொண்ட படமான படைப்பாளன் படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பாடலாசிரியர்
சினேகன் பேசியதாவது,

“இந்த மேடையை நான் மிக நெகிழ்வாகப் பார்க்கிறேன். அண்ணன் திருநாவுக்கரசர் உடன் மேடையில் தஞ்சையில் அமர்ந்த நிகழ்வு ஞாபகம் வருகிறது. அந்த வகையில் படைப்பாளன் படக்குழுவிற்கு நன்றி. உதவி இயக்குநர்கள் பற்றி ஒருபாடல் கேட்டார்கள். இங்கு வியாபாரத் தனமான பாடல்களுக்குத் தான் வரவேற்பு கிடைக்கிறது. இங்கு மனதறிந்து பாராட்டும் குணம் யாருக்கும் இல்லை. உதவி இயக்குநர்களின் வாழ்க்கையை நான் நிறைய பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வந்தபின் மற்றவர்களை கண்டுகொள்வதில்லை. அண்ணன் சீனுராமசாமி உதவி இயக்குநர்களின் வலிகளை சொல்லும் பாடலை இவ்வளவு சோகமாக சொல்ல வேண்டாம் என்றார். ஆனால் இங்கு கண்ணீரையும் சில சமயம் பதிவு செய்யவேண்டிய இருக்கிறது. உதவி இயக்குநர்களின் கண்ணீர் உண்மையானது. அதை இந்தப்படைப்பாளன் படம் செய்திருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up