Maga Muni

Follow
7.5

Good

4.9

User Avg

ENPT- மகாமுனி தவமிருந்த படங்கள் மோதுகின்றன

ENPT- மகாமுனி தவமிருந்த படங்கள் மோதுகின்றன

மகாமுனி படத்தை எட்டு வருடம் தவமிருந்து செதுக்கி இருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். இவர் மெளனகுரு படத்தை எடுத்து பரவலான கவனம் பெற்ற இயக்குநர். அப்படத்திற்கு பின் எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவரிடம் கதை கேட்டும் அவர் தயாராகவில்லை. இதோ மெகா உழைப்பைப் போட்டு மகாமுனி படத்தை உருவாக்கி இருக்கிறார். ஞானவேல்ராஜா தயாரிக்க ஆர்யா நடித்துள்ள இப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைகாண இருக்கிறது.
இந்தப்படத்தோடு மோத இருக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டாவும் பல சோதனைகளை கடந்த படம். கெளதம் வாசுதேவ்மேனன் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார். கெளரவ தோற்றத்தில் சசிகுமார் நடித்துள்ளார். பலத்த எதிர்பார்ப்போடு தயாரான இப்படம் பண நெருக்கடியால் சிக்கத் திணறியது. தற்போது எல்லா பஞ்சாயத்துகளையும் தாண்டி வரும் வெள்ளிக்கிழமை திரையரங்கை நோக்கிப் பாய இருக்கிறது. மகாமுனி என்னை நோக்கிப் பாயும் தோட்டா இருபெரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up