எப்பேர்பட்ட ஆளுமை.. நமக்கு தெரிஞ்சதை சொல்றோம்

எப்பேர்பட்ட ஆளுமை.. நமக்கு தெரிஞ்சதை சொல்றோம்

தினந்தந்தியை பார்த்தபோது ஒரு மூலையில் சின்னதாக 105 வது பிறந்தநாள் என்று குடும்பத்தார் விளம்பரம் தந்திருந்தார்கள்..

யார் என்று பார்த்தால் நடிப்பிசை புலவர்கே.ஆர்,ராமசாமி.. திமுகவில் மின்னிய முதல் டாப் ஸ்டார். திராவிட இயக்க கொள்கைகளை மேடை நாடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டுசென்றவர்.

அண்ணாவிற்கு மிகவும் பிடித்தமானவர். அண்ணா எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றவர். உண்மையில் எம்ஜிஆர் அடைய வேண்டிய இடத்தை அடைந்திருக்கவேண்டியவர்

1950களில் நிறைய படங்கள் நடித்தார். நமக்கு தெரிந்து திமுகவில் முதன்முதலில்எம்எல்சியாக சட்டசபைக்குள் நுழைந்தவர் இவர்தான்.எஸ்எஸ்ஆர் 1962ல்தான் எம்எல்ஏவாக வெற்றிபெற்று இந்திய அளவில் சாதனை படைத்தார்.

எம்ஜிஆரின் அபரிதமான வளர்ச்சி திமுகவில் பல நடிகர்களை ஓரம் கட்டியது. கேஆர் ராமசாமி. எஸ்எஸ்ஆர், வளையாபதி முத்துகிருஷ்ணன் என அது ஒரு பட்டியல் உண்டு.

அதேநேரத்தில் கே.ஆர் ராமசாமி மீது எம்ஜிஆர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் கடைசி காலத்தில் அரசகட்டளை, நம்நாடு ஆகிய படங்களில் வாய்ப்பு தந்தார்.

எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்திருந்த நேரம். கேஆர்ஆர் மகள் கலைசெல்வி நினைவுகூறுகிறார்..

“‘ திடீரென்று என் அம்மாவை அழைத்து எம்ஜிஆர் என் கல்யாணம் பற்றி பேசினார். எல்லா செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக சொன்னார்.அதன்படியும் செய்தார் கலைவாணர் மகனுக்கு என்னை மணமுடித்து வைத்தார்”

மனோகரா நாடகமாக போடப்பட்டபோது கே. ஆர். ராமசாமி மனோகராவாக நடிக்க மனோகராவின் தாயார் பத்மாவதியாக நடித்தவர் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன்..

வேலைக்காரி படமாவதற்கு முன்பு 1946- கே ஆர் ராமசாமி நடித்த நாடகம் தஞ்சாவூரில் ஒரு வருடம் தொடர்ச்சியாக நடந்தது என்பதெல்லாம் தனி வரலாறு.

செல்லப்பிள்ளை படத்தில் இடம் பெற்ற இந்த பாடலுக்கு இடைய ஒலிக்கும் கேஆர்ஆரின் கம்பீரக்குரல் வாவ்..ரேடியோவில் எத்தனையோ முறை கேட்ட பாடல்.

தன் சம்பாதியத்தையெல்லாம் திமுகவுக்காக வாரி வாரி வழங்கிய வள்ளல் நடிப்பிசை புலவர் கே.ஆர் ராமசாமி..

 

-ஏழுமலை வெங்கடேசன் (மூத்த பத்திரிகையாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up