ஜி.என்.குமரவேலுடன் இணையும் அருண் விஜய்

ஜி.என்.குமரவேலுடன் இணையும் அருண் விஜய்

ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் வரிசையில் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதையே கொள்கையாக மாற்றிக் கொண்டிருக்கிறார் அருண் விஜய். அவரின் இந்த முயற்சிக்குப் பலனாக சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ச்சியாக வெற்றியடைய தொடங்கியுள்ளது. தடம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதை அடுத்து உற்சாகம் அடைந்திருக்கும் அருண் விஜய், தற்போது ‘பாக்ஸர் மற்றும் மாபியா’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதனையடுத்து இயக்குநர் குமரவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் நேற்றுத் தொடங்கியது. படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜி.என்.குமரவேல் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ் மற்றும் வாகா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up