Hansika Motwani

Follow

ஹன்சிகா அழகி மட்டுமல்ல; சிறந்த நடிகையும் கூட – ஜமீல் புதுமுக இயக்குநர்

ஹன்சிகா அழகி மட்டுமல்ல; சிறந்த நடிகையும் கூட – ஜமீல் புதுமுக இயக்குநர்

ஹன்சிகா-வின் 50வது திரைப்படத்திற்கு “மஹா” என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இப்படத்தை இயக்க இருப்பவர் இயக்குநர் லட்சுமணனிடம் இணை இயக்குநராக இருந்த “ஜமீல்” ஆவார். இவரிடம் முதல் படமே ஏன் ஹீரோயின் சப்ஜெக்ட் படம்..? என்று கேள்வி எழுப்பிய பொழுது, “இங்கு முன்னிலையில் இருக்கும் ஒவ்வொரு நடிகருமே கையில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து படங்களை வைத்திருக்கிறார்கள். அதனால் தான் முதல் கதையை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக எழுதினேன். ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் திரைப்படத்தில் பணிபுரிந்த போது, ஹன்சிகாவின் நடிப்பை அருகில் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அவர் அழகி மட்டுமல்ல; மிகச்சிறந்த நடிகையும் கூட. அவரது நடிப்புத் திறமைக்கு தீனி போடும் படமாக “மஹா” திரைப்படம் இருக்கும். படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மதன் கார்க்கி வசனம் எழுதுவதோடு, படத்தின் பாடல்களையும் தாமரையுடன் இணைந்து எழுத இருக்கிறார். படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பரில் தொடங்க இருக்கிறது..” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up