”இந்தியன் – 2”-வை ஹிந்தியில் எடுக்கத் திட்டமா..?

”இந்தியன் – 2”-வை ஹிந்தியில் எடுக்கத் திட்டமா..?

1996ம் ஆண்டில் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, மாதுரி தீட்சித் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றத் திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகத்தை சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கினார் இயக்குநர் ஷங்கர். படப்பிடிப்புக்கான லொக்கேஷன்களை தேர்வு செய்வது, நடிகர் நடிகைகளை தேர்வு செய்வது என படம் தொடர்பான வேலைகள் வேகமாக நடைபெற்று வந்தன. இடையில் தேர்தல் குறுக்கிட்டதால் கமலும் தேர்தல் பிரச்சாரம் என பிஸியாகிவிட்டார். பட்ஜெட் தொடர்பான குழப்பங்களும் இருந்ததால் தயாரிப்பு நிறுவனமான லைகாவும் படத்தை கிடப்பில் போட்டுவிட்டதாக கூறுகின்றனர். இருப்பினும் கமல்ஹாசன் மற்றும் லைகா நிறுவனம் என இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் மற்றொரு தரப்பு செய்திகள் கூறுகின்றன. ஒருவேளை தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் – 2 படத்திற்கான முயற்சிகள் கைவிடப்பட்டால், ஹிந்தியில் அமீர்கான் அல்லது ஷாருக்கான் நடிப்பில் இப்படத்தை எடுக்கவும் இயக்குநர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up