Sri Reddy Mallidi

Follow

”இந்த உடம்பிலிருந்து உயிரை எடுத்துவிடுங்கள் “ – ஸ்ரீரெட்டி

”இந்த உடம்பிலிருந்து உயிரை எடுத்துவிடுங்கள் “ – ஸ்ரீரெட்டி

தெலுங்கு திரையுலகின் மீதும், அதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அந்தப் பரபரப்புகள் அடங்கி தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றுப் படமான ஸ்ரீரெட்டி டைரீஸ் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. அவ்வபோது அதிர்ச்சியூட்டும் பதிவுகளை ஃபேஸ்புக்கில் வெளியிடுவது நடிகை ஸ்ரீரெட்டியின் வழக்கம். அது போன்ற ஒரு அதிர்ச்சியூட்டும் உருக்கமான பதிவை நேற்று பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. அதில் “என்னுடைய பிறப்பை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். என்னுடைய தாயைத் தவிர வேறு எந்தத் தாயும் என்னைப் போன்ற பெண்ணுக்கு பிறப்பு கொடுத்திருக்கமாட்டாள். என்னை பெற்றெடுத்தது மட்டும் தான் என் தாயார் செய்த பெரும் தவறு. ஆனால் அவருக்கு நான் கொடும் தண்டனையை கொடுத்துவிட்டேன். நான் செய்த தவறுகளுக்காக அவர் எல்லோரிடமும் திட்டு வாங்கி வருகிறார். என் தாயார் கொடுத்த இந்த உடம்பிலிருந்து உயிரை எடுத்து, என்னைக் கொன்றுவிடுங்கள்..” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up