Irumbu Thirai

Follow
7

Good

7.7

User Avg

Irumbu Thirai Review

இரும்புத்திரை-விமர்சனம்

“சைபர் வார் தான் இனி மனிதர்களை அச்சுறுத்தும் ஆபத்து என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இரும்புத்திரை. அறிமுக இயக்குனர் மித்ரனின் கதை தேர்வும் அதை  ஸ்கீரினில் அவர் சொல்லியிருக்கும் நேர்த்தியும் நிச்சயம் அவருக்கு பெருமை சேர்க்கும். விஷால் ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இந்தப் படத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். படம் துவங்கும் முதல் காட்சியே நம்மை பதறச் செய்கிறது. அதைப்போல படத்தில் நம்மை எச்சரிக்கும் விசயங்களும் நிறைய உண்டு. மில்டரியில் மேஜராகவும் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஜாலி இளைஞனாகவும் அறிமுகமாகும் விஷால் படம் முழுதும் பலமுகம் காட்டியிருக்கிறார். அப்பாவிடம் எரிந்து விழும்போதும் தங்கையிடம் உருகிவிழும் போதும் சமந்தாவிடம் நெருங்கி வரும் போதும் அட்டகாசம் விஷால்.

சமந்தா காதல் காட்சிகளில் மட்டும் வராமல் கதையை நகர்த்தும் இடங்களிலும் வருவது சிறப்பு. ரோபோ சங்கரின் டைமிங் ரைமிங் பல இடங்களில் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. அர்ஜுனின் அறிமுகமும் அவர் செய்யும் அதகளமும் பட்டாசு. இங்கு யாரிடமும் உண்மையில்லை யாரும் உண்மையாகயில்லை என்று தன் தவறுக்கு நியாயம் சொல்லும் அர்ஜுன், ரியலில் அவரைப்போன்ற மனிதர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் எச்சரிக்கிறார்.

சந்தர்ப்பச் சூழ்நிலையால் போலி ஆவணங்களை காட்டி லோன் வாங்குபவர்களின் பணத்தை அக்கவுண்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் அடிக்கும் டிஜிட்டல் திருட்டுக் கூட்டத்தை விஷால் கண்டுபிடிப்பதில் இருந்து இரும்புத்திரை விலக ஆரம்பிக்கிறது. அப்படி விலக விலக நம் கண்கள் திரையில் இருந்து விலகாமல் இருப்பதே படத்தின் ஆகப்பெரிய பலம்.

ஸ்மார்ட் போனாலும் ஆப்களாளும் நாம் தெரிந்து கொண்டது நிறைய இருந்தாலும் அதன் மூலமாக நம்மைப் பற்றிய பல ரகசியங்களை நமக்கே தெரியாமல் பகிர்ந்து கொண்டோம். அதன் ஆபத்தை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம். ஆதார் கார்டின் பாதுகாப்பிற்கே உத்திரவாதம் இல்லாத நாட்டில் நமது ரகசியங்கள் எல்லாம் ரகசியமாக தான் இருக்கும் என்பதை எப்படி நம்பமுடியும்? இப்படி படம் நெடுக கேள்விகளும் குழப்பங்களும் சற்று நம்மை தடுமாறவும் தெளிவடையவும் செய்யும். இரும்புத்திரை காணவேண்டிய படம் மட்டும் இல்ல கவனிக்க வேண்டிய படமும் கூட.

 மு. ஜெகன் சேட்

Lost Password

Sign Up