K-13

Follow
6

Fair

K-13 Review

K13- விமர்சனம்

குழப்பமான கதையைத் தெளிவாகச் சொல்வது சவாலான விசயம். அந்தச் சவாலை இயக்குநர் பரத் நீலகண்டன் எப்படி எதிர்கொண்டிருக்கிறார்?

ஒரு ப்ளாட்டிற்குள் இளம்பெண்ணின் சடலத்தோடு மாட்டிக்கொண்ட அருள்நிதி போலீஸில் மாட்டாமல் எப்படி வெளிவந்தார் என்பது தான் கதை.
இது போன்ற படங்களின் பெரிய பலம் ரைட்டிங்கில் இயக்குநர் காட்டும் அழுத்தம் தான். அந்த அழுத்தம் திரையில் அப்படியே பிரதிபலிக்காமல் போனால் சம்பவம் சிக்கலானதாக மாறிவிடும். K13-ல் எழும் பிரச்சனையும் அதுதான். ரைட்டிங்கில் இருந்த அழுத்தம் ஸ்டேச்சிங்கில் இல்லை. முக்கியமாக லீட் ரோலில் நடிப்பால் அசத்தி இருக்கும் அருள்நிதி மற்றும் ஹீரோயின் மேல் நமக்கு பெரிய ஈர்ப்பு வரவில்லை. அதுவே அந்தக் கேரக்டர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற பதைப்பையும் தவிப்பையும் நமக்குத் தராமல் போய்விட்டது.

ஒரு விரல் அசைவிற்கும் தோதான இசையை பின்னணியில் ஒலிக்கவிட்டு அசத்தி இருக்கிறார் சாம்.சி எஸ்
சபாஷ்! ஒளிப்பதிவின் தரமும் பலமும் ஒவ்வொரு ப்ரேமிலும் ஜொலிக்கிறது. ஷார்ப்பான எடிட்டிங்கும் கவர்கிறது. ஆனாலும் முதல் அரை மணிநேர படம் சத்திய சோதனை தான்!

காயத்ரி கேரக்டர் அவருக்கான சிக்கல், அந்தச் சிக்கலால் மன குழப்பத்திற்கு ஆளாகும் நாயகி..இவர்களுக்குள் எதிர்பாராவிதமாக மாட்டிக்கொண்ட ஹீரோ..இப்பிரச்சனைகளுக்கு முடிவாய் யாராலும் யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ். அபாரமான கற்பனை என்றாலும் கத்தி மாதிரி ஷார்ப்பாக இருந்திருந்தால் படம் அசத்தலான அனுபவத்தை கொடுத்திருக்கும். இப்பவும் திரில்லர் ரசிகர்களை
இந்தப்படம் ஏமாற்றாது.

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up