கே.ஆர்.ராமசாமி மறந்து போன ஒரு மகத்த்தான நடிகர்

கே.ஆர்.ராமசாமி மறந்து போன ஒரு மகத்த்தான நடிகர்

இப்போது கேரவன் சகிதம் வாழும் பிரபல நடிகர்களே மறந்து போன மகத்தான கலைஞர்களில் ஒருவரிவர்.

பேரறிஞர் அண்ணாவின் செல்லப்பிள்ளை. நடிப்பிசைப் புலவர் என அண்ணாவால் பட்டம் சூட்டப்பட்டவர். வசனஉச்சரிப்பிலும் பாட்டிலும் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர் கே. ஆர்.ராமசாமி.

குடந்தையை அடுத்து அம்பா சமுத்திரத்தில்ராமபத்திர செட்டியார் குப்பம்மாள்தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த கே. ஆர். ராமசாமி நான்காவது வகுப்புடன்படிப்பை முடித்து விட்டு நாடகத்தில் நடிக்கத்தொடங்கி விட்டார்.பாய்ஸ் கொம்பனி என அழைக்கப்படும்மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கொம்பனியின்சிறுவர் நாடகக் குழுவில் இணைந்தார்.நடிப்பில் ஆர்வம் உள்ள கே. ஆர். ராமசாமிக்கு சிறு சிறு வேடங்களே கிடைத்தன.தனது ஆர்வத்துக்கு உரிய இடம் இதுஅல்ல என்பதை உணர்ந்த கே. ஆர். ராமசாமி, டி.கே. என். சண்முகம் சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்தார். அப்போது அவருக்கு 13 வயது.

டி.கே. சகோதரர்களின் நாடகக் குழுவில்இணைந்ததும் அவருடைய நடிப்பு மேலும்மெருகேறியது. டி.கே. சகோதரர்களின்மிக முக்கிய நடிகராக கே. ஆர். ராமசாமி திகழ்ந்தார். தொழில் மீது அவர்வைத்திருந்த பக்தி அவரை உச்சத்துக்குகொண்டு சென்றது.குடந்தையில் சிவலீலா என்ற நாடகம்தொடர்ந்து 38 நாட்கள் நடந்தது. அப்போது கே. ஆர். ராமசாமியின் தகப்பன் மரணப்படுக்கையில் இருந்தார். பகல் முழுவதும் தகப்பனின் அருகில் துக்கம் தோய்ந்த நிலையில் இருக்கும் கே. ஆர். ராமசாமி இரவு வேஷமிட்டு ஹேமநாதர் எனும் வேடத்தில் கலகலப்பாகி மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார்.

ராமாயணம் நாடகத்தில் கே. ஆர். ராமசாமி ஆஞ்சநேயர் வேடமேற்று நடித்தார்.ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை கே. ஆர். ராமசாமியின்தகப்பன் மரணமாகி விட்டார்.அன்று மாலை 6 மணி வரை ஆஞ்சநேயராக யாரை நடிக்க வைப்பது என்று தெரியாது நாடகக் குழுக்களும் குழம்பியது. 11மணிக்கு நடிக்க வருவேன் எனகே.ஆர்.ராமசாமி தகவல் அனுப்பி அதன் படி நடிக்க போனார்.

டி.கே. எஸ்ஸின் குழு நடித்த மேனகா,குமாஸ்தாவின் பெண் ஆகிய படங்களில்கே. ஆர். ராமசாமியும்நடித்தார். குமாஸ்தாவின் பெண் படத்தின் உதவி இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு ஆகிய இருவரின் மனதிலும் கே. ஆர். ராமசாமி இடம்பிடித்துவிட்டார். கே. ஆர். ராமசாமியின்கம்பீரமும் குரலும் நடிப்பும் அன்றை பிரபல நட்சத்திரமான தியாகராஜ பாகவதருக்கு ஈடõக இருந்ததை கிருஷ்ணனும் பஞ்சுவும் அவதானித்தனர்.தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் கே. ஆர்.ராமசாமியை கதாநாயகனாக்கி படம் இயக்குவது என இருவரும் முடிவு செய்தனர். தமது விருப்பத்தை தயாரிப்பாளரிடம் கூறினர். தயாரிப்பாளர் சம்மதித்ததால் 1944ஆம் ஆண்டு கே. ஆர். ராமசாமி திருஞானசம்பந்தராக நடித்த பூம்பாவை வெளியானது.

பூம்பாவை படம் சிறப்பாகப் பேசப்பட்டது. கே. ஆர். ராமசாமிக்குநல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. என்றாலும் அடுத்த படம்அவரைத் தேடி வரவில்லை.திரைப்பட வாய்ப்பு இல்லாததனால் மீண்டும் நாடக மேடைப் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கினார் கே. ஆர். ராமசாமி. மனோகரா நாடகத்தில் கே. ஆர். ராமசாமிமனோகராவாகவும் மனோகராவின் தாயார் பத்மாவதியாக கணேசனும் நடித்தனர்.அதே கணேசன்தான் பின்னர் மனோகராதிரைப்படத்தில் மனோகரனாக நடித்துகலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேசினார்.

பேரறிஞர் அண்ணாவின் நாடகங்களான ஓர் இரவு, வேலைக்காரி,சொர்க்க வாசல் ஆகியவை படமானபோது அவற்றில் நடித்து படத்துக்குசிறப்புச் சேர்த்தார் கே. ஆர். ராமசாமி.லட்சுமிகாந்தன் கொலைவழக்கி ல் தியாகராஜ பாகவதர் சிறை சென்றதால் அந்தஇடத்தை கே. ஆர். ராமசாமி நிறைவுசெய்தார். துளிவிஷம் படத்தில் கே. ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்தார். நடிகர் திலகம் வில்லனாக நடித்தார்.நாடோடி, அரச கட்டளை, நம் நாடுஆகிய படங்களில் மக்கள் திலகத்துடன்நடித்தார்.

1971 ஆம் ஆண்டு இதே நாளில் நடிப்பிசைப் புலவர்கே. ஆர். ராமசாமி காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up