‘தூங்காவனம்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் சீயான் விக்ரமும், கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஷாசன் இருவரும் நடித்து வரும் திரைப்படம் “கடாரம் கொண்டான்”. கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேசனல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது. அதில் கலக்கலான தோற்றத்தில் வரும் சீயான் விக்ரம் சீக்ரெட் போலீஸ் அதிகாரி போன்ற தோற்றத்தில் நடித்திருக்கிறார். பைக் சேசிங் மற்றும் கார் சேசிங் காட்சிகளும் படத்தின் ஒளிப்பதிவும் ஹாலிவுட் தரத்தில் அமைந்திருக்கிறது. அக்ஷராஹாசன் வேறு ஒரு இளம் நடிகருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஜிப்ரானின் பின்னணியிசை டிரைலரின் காட்சிகளுக்கு வலு சேர்ப்பது போல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போது, இப்படம் ஹாலிவுட்டில் வெளியான “Don’t’ Breath” படத்தின் ரீமேக் என்றும் கூறப்பட்டது. ஆனால் ”Don’t Breath” படத்திற்கும் ‘கடாரம் கொண்டான்” திரைப்படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகியிருக்கிறது.
“கடாரம் கொண்டான்” கலக்கல் தோற்றத்தில் சீயான் விக்ரம்
