Suriya

Follow

கலக்கப் போவது யாரு?

கலக்கப் போவது யாரு?

டவுட்டே இல்ல. இந்தவார போட்டி மாஸ்டர் பிரபுதேவாவுக்கும் மாஸ் சூர்யாவுக்கும் தான். யெஸ் நாளை மறுநாள் NGK படமும் தேவி2 படமும் வெளியாக இருக்கிறது. இருபடங்களுக்கும் முன்பதிவு துவங்கி விறுவிறுவென புக்கிங் ஆகிக்கொண்டிருக்கிறது. சூர்யாவிற்கு முந்தைய சில படங்கள் சரியாகப் போகாததால் இந்தப்படத்தை அவர் மிகவும் எதிர்பார்த்து இருக்கிறார். மேலும் செல்வராகவனும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதனால் எப்படியும் அந்தக் கூட்டணி ஹிட் கொடுத்தே ஆகவேண்டும். அதே சமயம் தேவி2 இயக்குநர் விஜய் வெற்றி என்ற ஒன்றை ருசித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கரு,லெட்சுமி, வாட்ச்மேன் என அவருக்கு தொடர்ந்து அடிமேல் அடி. அதனால் அவரும் களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறார். கூடவே தேவி முதல்பாகமும் ஹிட். இரண்டாம் பாகத்தின் ட்ரைலரும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால் நாளை மறுநாள் போட்டி பலமாக இருக்கும். பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up