களத்தில் வெண்ணிலா கபடி குழு2 ரிசல்ட் என்ன?

களத்தில் வெண்ணிலா கபடி குழு2 ரிசல்ட் என்ன?

சுசீந்திரன் இயக்கி விஷ்ணு விஷால் புரோட்டா சூரி, கிஷோர் ஆகியோர் நடிப்பில் அதகள வெற்றியைப் பெற்ற படம் வெண்ணிலா கபடி குழு. இப்படம் வெளியாகி பத்தாண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் அந்தப்படத்தின் தொடர்ச்சியை மேலோட்டமாக வைத்துக் கொண்டு விக்ராந்த் நடிப்பில் வெண்ணிலா கபடி குழு2 படம் வெளியாகியுள்ளது. கூர்கா, கொரில்லா ஆகிய படங்களோடு களத்தில் வெண்ணிலா கபடி குழு2 படமும் உள்ளதால் அப்படத்தின் ரிசல்ட் என்ற கேள்வி முந்தைய பாகத்தின் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருக்கும். தற்போது வந்துள்ள ரிசல்டின் படி கதையாகப் பார்த்தால் அப்படம் தேறும் வகையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் காட்சி அமைப்பில் முந்தைய வெண்ணிலா கபடி குழு படம் போல இல்லை என்றும் சொல்கிறார்கள். அதே சமயம் ஜஸ்ட் லைக் தட்டில் படம் தப்பித்து விடும் என்றும் தகவல்கள் வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up