கலைஞர்களுக்கு கதை மூலமாக அறிவுரை சொன்ன முதல்வர்

கலைஞர்களுக்கு கதை மூலமாக அறிவுரை சொன்ன முதல்வர்

தமிழ்திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விழாவில் முதல்வர் எடப்பாடி சொன்ன குட்டிக்கதை

“ஒரு முனிவர் மரத்தடியில் அமர்ந்து தனது கிழிந்த வேட்டியை தைத்துக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமானும், பார்வதி தேவியும் அவ்வழியே சென்று கொண்டிருந்தனர். மரத்தடியில் இருந்த முனிவரைப் பார்த்ததும், அவருக்கு ஏதேனும் வரம் கொடுத்து விட்டுப் போகலாம் என சிவபெருமானிடம் பார்வதி தேவி கூற, வரம் கேட்கும் நிலையெல்லாம் கடந்தவர் அந்த முனிவர், எனவே நாம் போகலாம் என்றார் சிவபெருமான். ஆனால் விடாமல் பார்வதி தேவி வற்புறுத்தியதால், இருவரும் அந்த முனிவரிடம் சென்று வணக்கம் தெரிவித்தனர். அவர்களைப் பார்த்த முனிவர், அடடே, எம்பெருமானும், பெருமாட்டியுமா, வரணும் என்று வரவேற்று உபசரித்தார். உபசரித்து விட்டு தன் வேலையைத் தொடர்ந்தார். இதைப் பார்த்த சிவபெருமானும், பார்வதி தேவியும் சரி நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர். அதற்கு முனிவர், மகிழ்ச்சியாய் போய் வாருங்கள், வணக்கம் என்று சொல்லி, தனது வேலையில் மூழ்கினார்.

இதைப் பார்த்த சிவபெருமான், முனிவரே, நாங்கள் ஒருவருக்கு காட்சி கொடுத்து விட்டால், வரம் கொடுக்காமல் போவதில்லை, எனவே ஏதாவது வரம் கேளுங்கள், கொடுக்கிறோம்”” என்று கூறினார். அதற்கு முனிவர், “”””தங்கள் தரிசனமே எனக்குப் போதும், வரம் எதுவும் வேண்டாம்”” எனக் கூறி தனது பணியைத் தொடர்ந்தார். வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று சிவபெருமானும், பார்வதி தேவியும் பிடிவாதம் பிடிக்கவே, முனிவர், “”””நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும், அது போதும்”” என்றார். “”””ஏற்கனவே, அது தானே நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்”” என பார்வதி தேவி கேட்டார். அதற்கு முனிவர், “”””அதைத் தான் நானும் கேட்கிறேன், நான் ஒழுங்கு தவறாமல் நடந்து வந்தால், வர வேண்டிய பலன் தானாகப் பின்னால் வரும், இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்”” எனக் கேட்டார். முனிவரின் விளக்கத்தைக் கேட்ட சிவபெருமானும், பார்வதி தேவியும் சிரித்து விட்டு மகிழ்ச்சியாய் சென்றனர். இந்தக் கதையில் வரும் முனிவரைப் போல, கலைஞர்களாகிய நீங்களும், உங்கள் துறைகளில் முழு மனதுடன் ஈடுபட்டதால் தான், உங்களுக்குரிய அங்கீகாரமான இந்த கலைமாமணி விருது உங்களைத் தேடி வந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up