Kamal Haasan

Follow
9.7

User Avg

கமல்ஹாசனுக்கு வலுக்கும் எதிர்ப்பு

கமல்ஹாசனுக்கு வலுக்கும் எதிர்ப்பு

நடைபெறவிருக்கும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தன் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் தான் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு நியாயம் கேட்க வந்திருக்கிறேன்..” என்று பேசினார். இதனால் அவரின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதோடு, அவருக்கு பல்வேறு திசைகளில் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரது வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பைலிருந்து சென்னை திரும்பிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பாலிவுட் உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரும், விவேகம் படத்தில் அஜீத்குமாருடன் இணைந்து நடித்தவருமான விவேக் ஓப்ராய் டிவிட்டரில் “நீங்கள் சிறந்த நடிகர். கலைக்கு எப்படி மதம் இல்லையோ அப்படியே தீவிரவாதத்திற்கும் மதம் இல்லை. நீங்கள் கோட்சேவை தீவிரவாதி என்று குறிப்பிடலாம். ஆனால் இந்து எனக் குறிப்பிட்டது ஏன். நீங்கள் பிரச்சாரம் செய்த பகுதி முஸ்லீம்கள் வாழும் பகுதி என்பதாலா..?? நீங்கள் மிகப்பெரிய நடிகர். ஒரு சிறிய நடிகனின் வேண்டுகோள். நாட்டைப் பிரிக்க வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றே..” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up