Udhayanidhi Stalin

Follow

கண்ணுக்கும் உதயநிதிக்கும் என்ன கனெக்ட்?

கண்ணுக்கும் உதயநிதிக்கும் என்ன கனெக்ட்?

ஆதவன் படத்தில் துண்டு ரோலில் வந்த உதயநிதி ஸ்டாலின் ஓ.கே ஓ.கே படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அந்தப்படம் கொடுத்த வெற்றியில் சரசரவென தொடர்ந்து படங்களாக நடித்துத் தள்ளினார். அவற்றில் கெத்து, மனிதன், நிமிர் ஆகிய படங்கள் அவரைக் கவனிக்க வைத்தன. தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது கண்ணை நம்பாதே என்ற ஒரு புதிய படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் தான் இயக்குகிறார். கண்ணுக்கும் உதயநிதிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? கண்ணே கலைமானே, கண்ணை நம்பாதே என தொடர்ந்து கண் சம்பந்தப்பட்ட டைட்டில் ஏன் என்ற கேள்விக்கு, இயக்குனரின் செண்டிமெண்ட் படி தான் இந்த தலைப்பு டிக் செய்யப்பட்டிருக்கிறது என்பது பதிலாக வந்துள்ளது. இரவுக்கு ஆயிரம் கண்கள் பெரு வெற்றி அடைந்ததால் அந்த செண்டிமெண்ட் படி இப்படத்திற்கும் கண்ணை மையப்படுத்தி டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். V.N.ரஞ்சித் தயாரிக்கும் இப்படம் பக்கா திரில்லர் சப்ஜெக்ட் என்பது இயக்குநர் மாறன் சொல்லிய கொசுறு செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up