”காந்தியைப் போல் வீட்டுக்கு ஒரு மகான் வர வேண்டும்” – மிஷ்கின்

”காந்தியைப் போல் வீட்டுக்கு ஒரு மகான் வர வேண்டும்” – மிஷ்கின்

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவம்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இப்படத்தில் மிஷ்கின், அதுல்யா ரவி, இயக்குநர் சுசீந்திரன், விக்ராந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம்மோகன் தயாரித்திருக்கும் இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், “இப்பொழுதெல்லாம் நடிப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டது, இந்தக்கதையை 10 நிமிடம் தான் கேட்டிருப்பேன். கதை பிடித்திருந்ததாலும், விக்ராந்த், இயக்குநர் ராம்பிரகாஷ் ஆகியோர் இளைஞர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாலும் தான் படத்தில் நடிக்க சம்மதித்தேன். ஆனாலும் படத்தின் இயக்குநர் மற்றும் போஸ்டர் டிஷைனர் மீது எனக்கு கோபம் இருக்கிறது. போஸ்டரில் காந்தியின் படத்தை விட என் படத்தை பெரியதாக போட்டிருப்பது மிகவும் தவறு. காந்தியுடன் ஒப்பிடும் போது நான் மிகமிக சிறியவன். அவர் இந்த மண்ணில் பிறந்ததும், நமக்காக போராடியதும் நாம் செய்த பாக்கியம். அவரைப் போன்ற மகான்கள் இல்லாததால் தான் நாடு இப்படி நாசமாகப் போய்விட்டது. காந்தியைப் போல் வீட்டுக்கு ஒரு மகான் வரவேண்டு. அப்பொழுது தான் நாடு முன்னேறும்.” என்று அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up