கருப்பு தான் அழகுன்னு சொல்லி ஏமாத்தாதீங்கடா

கருப்பு தான் அழகுன்னு சொல்லி ஏமாத்தாதீங்கடா

இன்று காலையில் கதையின் நாயகி என ஒரு குறும்படம் பார்த்தேன். உள்ளடக்கமும் உணர்ச்சியும் அழகாக வடிவமைக்கப்பட்ட படம் அது. படத்தின் பேசுபொருள் நிறம் சம்பந்தப்பட்டது. மிகச்சிறந்த நடிப்புத் திறமையுள்ள தமிழ் பெண்ணுக்கு கருப்பாக இருப்பதாலே சினிமாவில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவள் தன் நிறத்தை எண்ணி மறுகுவதும், ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறுவதுமாக படம் முடிகிறது. படம் பேசி இருக்கும் ஒரு முக்கியமான விசயம் நம் முகத்தில் அறைகிறது. நாயகன் கருப்பாக இருந்தால் ஏற்றுக்கொள்ளும் நமக்கு நாயகி கருப்பாக இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த உளவியலை நினைத்துப் பார்க்கும் போதே வெட்கமாக இருக்கிறது. மேலும் தமிழன் திராவிடம் கருப்பு தான் கெத்து என்பதெல்லாம் வெறும் போலீக்கூச்சல் தானா? என்ற கேள்வியையும் படம் முன் வைக்கிறது. தமிழார்வம் கொண்டவர்கள் கூட தங்கள் படங்களில் கருப்பான நடிகைகளை தவிர்த்து விடுகிறார்கள். நிச்சயம் விவாதிக்க வேண்டிய ஒரு குறும்படம் இது. இப்படத்தில் கதையின் நாயகியாக சரண்யா நடித்துள்ளார். ஏற்கனவே இவர் பல குறும்படங்களிலும் பெரும் படங்களிலும் நடித்து நல்ல அடையாளத்தைப் பெற்றவர். மிகச் சிறந்த நடிப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறார். ஒருவேளை அவருக்கு இப்படியான அனுபவங்கள் கிடைத்திருக்கக் கூடும். அதனால் தான் அவரால் நம்மை ஒருசில இடத்தில் கண்ணீர் சிந்த வைக்க முடிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up