Karthi

Follow

காதலர் தினத்தன்று, கார்த்தியின் “தேவ்”

காதலர் தினத்தன்று, கார்த்தியின் “தேவ்”

கடந்த ஆண்டின் மிகச்சிறந்த வெற்றிப்படங்களாக அமைந்த இரண்டு படங்கள் என்றால் அது “தீரன் அதிகாரம் ஒன்று” மற்றும் ”கடைக்குட்டி சிங்கம்”. இந்த இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் “தேவ்” படத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். ஆக்சன் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, படத்தை பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட படக்குழுவினர் பரபரப்பாக உழைத்து வந்தனர். ஆனால் சில பணிகள் முடிவடைய காலதாமதம் ஆகும் என்பது தெரியவந்ததால், படத்தை பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up