கவிதாலயா நிறுவனத்தின் அடுத்த பயணம் ஆரம்பம்

கவிதாலயா நிறுவனத்தின் அடுத்த பயணம் ஆரம்பம்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தமிழ்சினிமாவின் தனித்த அடையாளம். சினிமாவிற்கு இன்று வரும் இளைஞனுக்கும் அவரது படங்கள் தான் பாலபாடம். அவரின் 89-வது பிறந்தநாளையொட்டி அவரது கவிதாலயா நிறுவனம் தனது அடுத்தப் பயணத்தைத் துவங்கியுள்ளது. பாலசந்தர் இயக்கி கமல் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் மன்மதலீலை. 1976-ல் வெளிவந்த இப்படத்தை இந்தக் கால கட்டத்திற்கு ஏற்றவாறு சிலபல மாற்றங்களோடு தயாரிக்க இருக்கிறது கவிதாலயா. இப்படத்தை சரண் இயக்க இருக்கிறார். மேலும் கவிதாலயா நிறுவனத்தார் ஒரு யூட்யூப் சேனலையும் துவங்கி இருக்கிறார்கள். எனிவே கவிதாலயா ஒரு பாரம்பரிய மிக்க நிறுவனம். அது பெரிய பாரங்கள் எதுவுமின்றி இலகுவாக பயணித்து பல இலக்குகளை அடைய வாழ்த்துவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up