Kolaigaran

Follow
7

Good

Kolaigaran Review

கொலைகாரன்- விமர்சனம்

திமிரு பிடிச்ச போலீஸ் படங்களுக்கு நடுவால் வெறிபிடித்து ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேஷன் படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ். ஒரு சாதாரண கதை அசாதாரண படமாக மாறுவதற்கு நேர்த்தியான திரைக்கதை அவசியம். அதை உணர்ந்து திரைக்கதை எழுதி அதை அழகான காட்சிப்படுத்திய இயக்குநருக்கு ஒரு கொலைவெறி பூங்கொத்து 💐

ஒரு கொலைக்கான காரணம் யார் என்ற விசாரணை தான் படத்தின் நெடும்பயணம். அதை ஆரம்பித்த விதமும் அப்பயணம் முடிவுறும் இடமும் அட்டகாசம். குறிப்பாக முதல் காட்சி ஒரு கொலையோடும், விஜய் ஆண்டனி போலீஸில் சரண்டர் ஆவதோடும் தொடங்குவதால் படம் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலே நம்மோடு ஒட்டிக்கொள்கிறது. வெட்டி வீச வேண்டிய காட்சி என்று எதுவும் இல்லாத அளவிற்கு உழைத்திருக்கும் எடிட்டருக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்!

இயக்குநருக்கு வலது கையாகவும் பெரு வரமாகவும் வந்து வாய்த்திருக்கிறார்கள் இசை அமைப்பாளர் சைமன் கே.கிங்கும், ஒளிப்பதிவாளர் முகேஷும். குறிப்பாக வியாசர் பாடியில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சியில் கேமராமேனின் உழைப்பு அசர வைக்கிறது. அதேபோல் காட்சிகளுக்கான உணர்வை இசை அமைப்பாளர் மிகச் சரியாக கடத்தி இருக்கிறார்.

நடிகர்களில் முதலிடம் முதல்வன் அர்ஜுனுக்குத் தான். முதலில் விஜய் ஆண்டனியை அவர் டீல் பண்ணும் காட்சிகளில் ஒரு மேனரிசமும், பின் விஜய் ஆண்டனியின் கடந்தகால வாழ்க்கை முறை தெரிந்த பின் அவரை டீல் பண்ணும் மேனரிசமும் என வெரைட்டி காட்டி மெஸ்மரிசம் பண்ணுகிறார் மனிதர். விஜய் ஆண்டனிக்கு ஈசியாக நடிக்க வரக் கூடிய ஷாப்ட் மற்றும் ஷார்ப் கேரக்டர் என்பதால் அவர் குறை ஒன்றும் வைக்கவில்லை. ஹீரோயின் ஆஷிமா நர்வால் நல்வரவு. நாசர் சீதா கேரக்டர்கள் போலவே சிறிது நேரம் வந்தாலும் வம்சி கேரக்டரும் நறுக். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான எழுத்தும் படு ஸ்ட்ராங். முன்பாதியில் ஏற்படும் சில குழப்பங்கள், சின்னச்சின்ன தடுமாற்றங்கள் எல்லாவற்றையும் பின்பாதி மறக்கடிப்பது படத்தின் பெரியபலம்.

பாபநாசம் முதல் சில படங்களை நினைவூட்டினாலும் இந்த கொலைகாரன் டெக்னிக்கல் மற்றும் திரைக்கதைக்காகவே பலநாள் நினைவு கூரப்படுவான்!

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up