கவுண்டமணி எனும் மகத்தான கலைஞன் HBD

கவுண்டமணி எனும் மகத்தான கலைஞன் HBD

‘கவுண்டமணி’ எனும் பெயர் இல்லாமல் தமிழ் சினிமாவின் நகைச்சுவை பக்கங்களை நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சகாப்தம் படைத்தவர் கவுண்டமணி. அவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்

உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம் பகுதியில் பிறந்த சுப்ரமணி, திரையுலகில் இயக்குனர் பாரதிராஜாவால் 16 வயதினிலே படத்தின் மூலம் கவுண்டமணியாக அறிமுகம் ஆனார். அதற்கு முன்புவரை மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர், சக நடிகர்களுக்கு கவுன்ட்டர் கொடுப்பதில் வித்தகர். அதனால் கவுன்ட்டர் மணியாக அறியப்பட்டார். அதுவே பின்னாளில் கவுண்டமணியாக நிலைத்தது.

ஒரு காலத்தில் கவுண்டமணி இல்லாமல் திரைப்படங்கள் வெளியாகவே இல்லை என்று சொல்லாம். இதுவரை அவர் நடித்துள்ள 750-க்கும் மேற்பட்ட படங்களில் 450-க்கும் மேற்பட்ட படங்கள், செந்திலுடன் கூட்டணி அமைத்து நடித்துள்ளார். இவர்கள் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

‘பார்த்தால் காமெடியன், பேச்சில் அறிவாளி’ என்று கவுண்டமணி குறித்து இயக்குனர் மணிவண்ணன் கூறுவது வழக்கம். உலக சினிமா மீதும் தத்துவங்கள் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் கவுண்டமணி. அதனால்தான் சினிமாவில் அரசியல் நையாண்டி வசனங்களை அதிகமாக பயன்படுத்துவார்.

அதேபோல கவுண்டமணியின் உடல்மொழியும் அவரது நகைச்சுவையில் ரசிக்கும்படியான விழிப்புணர்வு கருத்துகளும் பிரபலம் வாய்ந்தவை. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட பிறகு அவர் சினிமாவில் தொடர்ச்சியாக நடிப்பதை குறைத்துக்கொண்டார். ஆனால் இன்றும் மீம்ஸ் போடும் இணையவாசிகளின் ஆதர்சநாயகனே கவுண்டமணிதான். அதனால் தான் தலைமுறைகளை கடந்து இன்றும் அவர் பிரபலமாக இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மறக்க முடியா கலைஞனுக்கு 81 ஆவது பிறந்தநாளில் வாழ்த்துவதில் நமக்குத் தான் பெருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up