Kaatrin Mozhi

Follow
6.5

Fair

குடும்பப் பொண்ணு போஸ்டிங்..சுட்டிப்பொண்ணு ஆக்டிங்- காற்றின் மொழி ஜோதிகா

குடும்பப் பொண்ணு போஸ்டிங்..சுட்டிப்பொண்ணு ஆக்டிங்- காற்றின் மொழி ஜோதிகா

ஜோதிகா எப்படி நடிச்சா பிடிக்கும்? என்று கேட்டால், ஜோதிகா நடிச்சாலே பிடிக்கும் என்பது தான பலரின் பதிலாக இருக்கும். எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதில் தன்னைக் கச்சிதமாக பொருத்திக் கொள்ளும் வல்லமை கொண்டவர் ஜோ. சந்திரமுகி கங்காவாக இருந்தாலும், 36 வயதினிலே வசந்தியாக இருந்தாலும், மொழி அர்ச்சனாவாக இருந்தாலும் அங்கு பட்டொளி வீசிப்பறக்கும் ஜோதிகாவின் நடிப்புக்கொடி. பல பரிமாணங்களில் ஜோ கலக்கி இருந்தாலும் குறும்புத்தன ஜோதிகாவிற்குத் தான் கொலவெறி ரசிகர்கள் அதிகம்.

திருமணத்திற்குப் பிறகு ஜோதிகாவின் திரைப்பிரவேசத்தில் 36 வயதினிலே அட்டகாச ஆரம்பம். மகளிர் மட்டும் படத்திலும் பக்கா ஸ்கோர் பண்ணி இருந்தார். 36 வயதினிலே படத்தில் சீரியஸ் பெண்ண்காவும், மகளிர் மட்டும் படத்தில் சமூக அக்கறை உள்ள பெண்ணாகவும் நடித்திருந்தார். ஆனால் வரவிருக்கிற காற்றின் மொழி படத்தின் டீசரும் பாடல்களும் குடும்பத்தலைவி மற்றும் குறும்புத் தலைவியாக ஜோதிகாவைக் காட்டும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கின்றன. மொழி படத்திற்குப் பிறகு ராதாமோகன் ஜோதிகா காம்போ காற்றின் மொழியில் அசத்தும் என்பது ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. சோ நவம்பர் 15-ம் தேதியும் ஒரு தீபாவளி இருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up