மறைந்த முன்னால் முதல்வரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் ஏற்கனவே மும்முனை போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் போட்டி லிங்குசாமியின் வருகையால் நான்கு முனைப் போட்டியாக மாறி இருக்கிறது. லிங்குசாமி ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்க இருக்கிறார் என்கின்ற செய்தியை திவாகரனின் மகனான ஜெயானந்த் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில் என் நண்பரும் மதிப்புக்குரிய இயக்குநருமான லிங்குசாமி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறந்த படமாக எடுப்பார்; அதில் சசிகலா மற்றும் நடராஜன் கதாபாத்திரங்கள் முக்கியமானதாக இருக்கும். பல அரசியல் தலைவர்களுடன் பேசி அதில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மிக நேர்மையான முறையில் இப்படம் எடுக்கப்படும் என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே இதே பயோகிராஃபியை எடுப்பதற்கான முயற்சியில் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் மற்றும் பிரியதர்ஷிணி மூவரும் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லிங்குசாமியும் “ஜெ” பயோகிராபியை எடுக்கிறாரா…???
