Lisaa Review

Lisaa
Review
A horror film directed by Raju Viswanath, starring Anjali and in the lead role.

 

Cast: Anjali

Release Date:Genre:, Directed by:Produced by:

லிசா – விமர்சனம்

சிங்கிள் மதராக இருக்கும் தன் அம்மாவிற்கு ஒரு துணையைத் தேடித் தரவேண்டும் என்று விரும்புகிறார் மகளான அஞ்சலி. அஞ்சலியின் தாய் அதற்கு தன் தாய் தந்தையின் (அதாவது அஞ்சலியின் பாட்டி தாத்தா) சம்மதம் அவசியம் என்கிறார். உடனே பாட்டி தாத்தாவை தேடிப் போகிறார் அஞ்சு. அங்கு நிறைய அதிர்ச்சிகள். முடிவில் அதிர்ச்சி விலகி எப்படி மகிழ்ச்சி வந்தது என்பதே லிசா!

பேரன்பிற்கு பிறகு இப்படியொரு கதையிலா அஞ்சலி வந்து விழவேண்டும். கதாபாத்திர வார்ப்பிலும் திரைக்கதையிலும் துளி சுவாரஸ்யமும் இல்லை. அதனாலே அஞ்சலி நடிப்பு நாடகத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. கூட நடிக்கும் அத்தனை நடிகர்களும் அப்படியே. ஓவர் ஆக்டிங்கில் நெஞ்சை நக்குவது எப்படி என்பதற்கு லிசா நடிகர்கள் சாட்சி.

ஒளிப்பதிவில் இருக்கும் தரம் 3D எபெக்டில் பெரிதாக இல்லை. சிஜியும் கூலிங் இல்லாத ஏசி போல் எரிச்சலைத் தான் ஏற்படுத்துகிறது. எந்த மெனக்கெடலும் இல்லாமல் எப்படி இப்படி ஒரு படத்தை உருவாக்க முன் வந்தார்கள் என்றே தெரியவில்லை. தேவையில்லாத ஒரு ஷாட் கூட படத்தில் இருக்கக் கூடாது என்பார்கள். லிசாவில் பிரம்மானந்தா வரும் காமெடி காட்சிகள் எனும் மொக்கை காட்சிகளை எல்லாம் அப்படியே வெட்டி வீசி பேய்க்காட்டில் கொண்டு போட்டிருக்கலாம். பேய் சீன் வரும்போது கூட பயம் வரல. காமெடி சீன் வரும்போது தான் பயமாக இருக்கிறது. இந்த தமிழ்நாடு இன்னும் எத்தனை அதிர்ச்சிகளை தாங்க வேண்டிய இருக்கிறதோ?

-மு.ஜெகன்சேட்

4

Poor

Lost Password

Sign Up