Vadivelu

Follow

“மாப்பு வச்சிட்டாங்கடா ஆப்பு” வடிவேலுக்கு நடிக்க தடை

“மாப்பு வச்சிட்டாங்கடா ஆப்பு” வடிவேலுக்கு நடிக்க தடை

இம்சை பிடிச்ச நேரத்துல கூட வடிவேலுவோட இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தைப் பார்த்தால் மனசில் இருக்க இம்சை வயிற்றுக்கு வந்துவிடும். அப்படியொரு அசாத்திய நகைச்சுவை கொண்ட படம் அது. அதே படத்தை இரண்டாம் பாகமா தயாரிக்கலாம்னு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் ப்ளான் போட்டார். இயக்குனர் சிம்புதேவன் கதைக்கு ப்ளாட் போட்டார். ஆனால் சூட்டிங்கில் வடிவேலு கட்டையப் போட்டுவிட்டார். படம் ஆரம்பித்ததுமே படத்தில் வடிவேலுவின் தலையீடு அதிகம் இருந்ததாக சொல்லப்பட்டது இயக்குனர் சிம்புதேவன் தரப்பில். நாளாக நாளாக ஒரு கட்டத்தில் கைப்புள்ள கட்டத்துரையாக மாறி படத்தில் நடிக்க முடியாது என வில்லத்தனம் காட்ட விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போயிட்டு. சங்கர் பணத்தைத் திருப்பி கேட்க, வடிவேலு முரண்டு பிடிக்க..வடிவேலு பக்கம் இருக்கும் வாதத்தையும், சங்கர், சிம்புதேவன் பக்கம் இருக்குற நஷ்டத்தையும் கணக்குப் பார்த்த தயாரிப்பாளர் சங்கம், தற்போது வடிவேலுவை புதிய படங்களில் யாரும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று தடை போட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up