Maga Muni

Follow
7.5

Good

4.9

User Avg

மகாமுனி படத்தை ஏன் பார்க்க வேண்டும்? 5 காரணங்கள்

மகாமுனி படத்தை ஏன் பார்க்க வேண்டும்? 5 காரணங்கள்

நாற்பது வருசத்திற்கு ஒருமுறை அத்திவரதர் வெளில வர்றமாதிரி எட்டு வருசம் கழித்து வெளில வந்து ஒருபடம் பண்ணிருக்கார் இயக்குநர் சாந்தகுமார். இவரின் பொறுமையான படைப்புறுவாக்கத்திற்கே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பது முதல்காரணம்.

சில படங்களில் யார்யா இந்த ஆர்யா? என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு அசரடித்த நடிகர் ஆர்யா இந்தப்படத்தில் மீண்டு (நடிகராக )வந்திருக்கிறார் என்பது தகவலாக பரவி வருகிறது. இதுதான் இப்படத்தைக் காணவேண்டும் என்பதற்கான இரண்டாவது காரணம்

மூன்றாவது காரணம் சாந்தகுமாரின் திரைக்கதை ட்ரீட்மெண்ட். மெளனகுருவை எடுத்துக்கொண்டால் அப்படத்தின் திரைக்கதையில் ஒரு மேஜிக் நிகழ்ந்திருக்கும். அந்த மேஜிக்கை அதே படத்தை இந்தியில் எடுத்த முருகதாஸால் கூட நிகழ்த்த முடியவில்லை. அந்த மேஜிக்கிற்காக வெயிட்டிங்கு

மெஹந்தி சர்க்கஸ் மாதிரி சில கவிதைகளையும் தன் தயாரிப்பில் கொடுப்பார் ஞானவேல்ராஜா. அவரது தயாரிப்பில் இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு பாஸிட்டிவ் வைப்ரேசனைக் கொடுக்கும் என்கிறார்கள் படத்தை பார்த்துவிட்ட பத்திரிகையாளர்கள்

ஐந்தாவது காரணம் மிக முக்கியமானது. ஒரு மாதகாலமாக நல்லபடம் பார்த்தே ஆகவேண்டும் என்ற கொலப்பசியில் இருக்கும் ரசிகனுக்கு இப்படம் நல்ல விருந்து கொடுக்கும் என்பதற்கு படத்தின் ஸ்னீக்பீக் சாட்சியாக இருக்கிறது. இலையில் வைத்து ஊறுகாயிலே இவ்வளவு ருசி என்றால் மீதி விருந்தில் நிச்சயம் பசியாறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up